• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-29 17:27:17    
உள்மங்கோலியாவில் வாழும் தாவோர் இன மக்கள்

cri

தாவோர் இனம், சீனாவின் வடபகுதியில் நீண்டகால வரலாறுடைய தேசிய இனங்களில் ஒன்றாகும். வரலாற்றுத் தகவலின் படி, தாவோர் இனத்தவர், Tao Er ஆற்றுப்பள்ளத்தாக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட Qi Dan இனத்தின் வம்சாவழியினர் ஆவர். இது பற்றி மாவட்டத் தலைவர் Yan Dong கூறியதாவது:

தாவோர் இனத்தவர்கள், Qi Dan இனத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆதி காலத்தில், Hei Long Jiang ஆற்றின் மேல்பகுதி, தாவோர் இனம் வசித்த இடமாகும். Qing வம்ச காலத்தில் Owenke, Elunchun உள்ளிட்ட இன மக்களுடன் இணைந்து தவோர் இன மக்கள், czaris ரஷியாவின் ஆக்கிரமிப்பைக் கூட்டாக எதிர்த்து நின்று, உயிருடன், வட சீனாவின் எல்லைப் பிரதேசத்தை பாதுகாத்தனர். பின்னர், Heilongjiang ஆற்றுப்பள்ளத்தாக்கிலிருந்து, Nen Jiang ஆற்றுப்பள்ளதாக்கிற்கு அவர்கள் குடிபெயர்ந்தனர். குடும்பங்களின் அளவுக்கிணங்க, Nen Jiang ஆற்றின் நெடுகிலும் கிராமங்களை அவர்கள் அமைத்தனர். Nen Jiang ஆற்றுப்பள்ளத்தாக்கு முதல் Hei Long Jiang மாநிலத்தின் தலைநகர் Harbinன் புறநகரான Hu Lan பிரதேசம் வரை, தாவோர் இன மக்கள் வசிக்கின்றனர்.

தாவோர் இனத்தவர்களின் வீடுகளும் தோட்டங்களும் சீராக காணப்படுகின்றன. இத்தோட்டங்களைச் சுற்றி Jarrah, birch ஆகிய மரங்களின் கிளைகளால் வேயப்படும் வேலிகள் அமைந்துள்ளன. கட்டிடக் கட்டமைப்பு துறையின் அனுபவம் கொண்ட முதியோர் Lin He Bu இது பற்றி விவரிக்கின்றார்.

"தாவோர் இனத்தின் வீடுகள் வெளிச்சத்துடனும் இடவசதியுடனும் காணப்படுகின்றன. வீடுகளில் சூரிய ஒளி அதிகமாக வீசுகின்றது. தாவோர் இனத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்களின் படி, வீட்டின் மேற்கு பகுதி, மதிப்பாக கருதப்படுகின்றது. வீட்டின் மேற்கில் உள்ள அறைகள், தாவோர் இன மக்களின் படுகை அறைகளாகும். வீட்டில் உள்ள தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் "Kangகள்" இணைக்கப்படுகின்றன" என்றார் அவர். "Kang" என்றால், கற்களால் கட்டியமைக்கப்படும் படுகை என பொருள்.

சீனாவின் பெருஞ்சுவர், உலகளவில் 7 முக்கிய அதிசயங்களில் ஒன்றாகும். Nen Jiang ஆற்றின் கரையோரத்தில், ஒரு வரலாற்று சிதிலம் அமைந்துள்ளது. Jin வம்ச கால படைப்பு என இது அழைக்கப்படுகின்றது. தாவோர் இனத்தின் புராணத்தில், நீண்டகாலமாக தாவோர் இன மக்களால் மதிக்கப்படும் மன்னர்-Sajihaerdi Han, இதைக் கட்டியமைக்குமாறு கட்டளையிட்டார். Hun இனத்தின் ஆக்கிரமிப்பை தடுத்து நின்றது என்பது, இது கட்டியமைக்கப்பட்டதன் நோக்கம். இதன் மொத்த நீளம், சுமார் 55 ஆயிரம் கிலோமீட்டர். 800க்கு அதிகமான ஆண்டுகளாக, Jin வம்ச கால கட்டுமானம், காற்று மற்றும் மழையின் அரிப்புக்குள்ளாயிற்று. இருந்த போதிலும், மலைகளுக்கு ஊடாக இது வளைந்து நெளிந்து செல்கின்றது. தற்போது, சீன தேசத்தில் முக்கியமாக பாதுகாக்கப்படும் தொல் பொருளாகியுள்ளது. து மின் யேன் என்னும் சுற்றுலா ஆணையத்தின் துணை தலைவர் கூறியதாவது:

"ஒவ்வொரு தாவோர் இன குடும்பத்துக்கும், தமது குடும்ப வாரிசுப் பட்டியல் உண்டு. இப்பட்டியலைத் திறக்கும் விழா, சிறப்பான நிகழ்ச்சியாகும். விழாவில், தாவோர் இன மக்கள் பன்றிகளையும் ஆடுகளையும் கொன்று, Ao Baoக்கு படையல் செய்கின்றனர். விழாவில் சில தலைமுறையினர்களின் பெயர்கள் குடும்ப வாரிசுப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன" என்றார், அவர்.

தாவோர் இன மக்கள் வேட்டையாடலில் தேர்ச்சி பெற்றவர்கள். இது மட்டுமல்ல, Elunchun இனத்துக்கும் வெளியுலகத்துக்கும் இடையே தொடர்பு கொள்ளும் சங்கிலித்தொடராக இவர்கள் திகழ்கின்றனர். வேட்டையாடலில் Elunchun இனத்தவர்கள் பெறும் தோல்களை, மலையடிவாரத்துக்குத் தாவோர் இன மக்கள் கொண்டு செல்கின்றனர். இந்த தோல்களைப் பயன்படுத்தி, துப்பாக்கி குண்டுகள், உப்பு ஆகியவற்றை அவர்கள் பரிமாறிக் கொள்கின்றனர். Owenke இனத்தவர் மான் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். தாவோர் இனமும் மிக முன்னதாக மான் வளர்ப்பில் ஈடுபட்டவர்களாவர். மங்கோலிய இன மக்கள் நாடோடி வாழ்க்கை நடத்துகின்றனர். தாவோர் இன மக்களும், கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுகின்றனர். சீனாவின் வடபகுதியில், தாவோர் இனம் நீண்டகாலத்துக்கு முன்னதாகவே ஓரிடத்தில் வசித்து, வேளாண் துறையில் ஈடுபடும் தேசிய இனமாக திகழ்கின்றது. தாவோர் இனத்தின் இளைஞர்கள், Da Xing An Ling என்ற காடுகளில் மரங்களை வெட்டுகின்றனர். Nami ஆறு மற்றும் Nen Jiang ஆறு மூலம் மரங்களை கொண்டு செல்கின்றனர். மகளிர் வீட்டில் புகையிலையைப் பயிரிட்டு, புகையிலை பதனீட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றனர். துணை தலைவர் து மின் யேன் கூறியதாவது:

தாவோர் இனத்துக்கு மொழி உண்டு. ஆனால் எழுத்து இல்லை. Qing வம்சத்தின் பேரரசர் Qian Long ஆட்சி புரிந்த காலத்தில், Aolachangxin என்னும் அதிகாரி, பேரரசரின் கோரிக்கையின் படி, Heilongjiang ஆற்றுப் பள்ளத்தாக்கு பிரதேசத்தில் மூன்று முறை சோதனை பயணம் மேற்கொண்டார். பேரரசருக்கு அவர் சமர்ப்பித்த மடல், "Wu Chun" என்ற வடிவத்தில், Man மொழியில் எழுதப்பட்டது என்று தெரிய வந்தது. "Wu Chun" என்பது, தாவோர் இனத்தின் கதைப்பாடல் கலையாகும். தற்போது வரையிலும், Aolachangxinயின் மடல் தாவோர் மக்களிடையே பாதுகாக்கப்படுகின்றது. தாவோர் இனத்தின் நாட்டுப்புற வாய்மொழி இலக்கியம், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக்கதைகள், நாட்டுப்புற ஆடல், தொழிற்கலை, ஓவியம் மற்றும் சிற்பக்கலை அதிகமாக காணப்படுகின்றன. கலையின் உருவம் தெளிவாக தெரிகிறது. இதன் அமைப்பு எளிமையாகவும், சிக்கலில்லாமலும் உள்ளது. இதன் பாணி, தூய்மையும், அழகும், புத்துணர்ச்சியும் கொண்டது. இது, தேசிய இனத் தனித்தன்மை வாய்ந்தது. தாவோர் இன மக்களின் அழகியல் உணர்வும் படைப்பாக்க விவேகமும் காணப்படுகின்றன.

தாவோர் இனத்தவர் பயன்படுத்தும் பெரிய சக்கர வாகனம் அவர்களின் விவேகத்தை வெளிப்படுத்துகின்றது. கட்டடங்களின் கட்டமைப்பு பற்றி முதியோர் Lin He Bu ஆய்வு செய்கின்றார். இது மட்டுமல்ல, பெரிய சக்கர வாகனத் தயாரிப்பில் அவர் நிபுணர் ஆவார். அவர் கூறியதாவது:

"பெரிய சக்கர வாகனம் உயரமானது. அதன் கொள்ளிடம் சிறியது. கார்கள் மற்றும் லாரிகள் நுழைய முடியாத இடங்களுக்குள் பெரிய சக்கர வாகனம் நுழைய முடியும். கூட, இந்த வாகனங்கள் மலைச்சிகரத்திலும் ஏற முடியும்" என்றார், அவர்.

பெரிய சக்கர வாகனத்தைத் தவிர, நாட்டுப்புற ஓவியம் மற்றும் காகிதக் கத்தரிப்பு மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. தாவோர் இன மங்கைகளும், முதியோர்களும் இக்கலையை மிகவும் நேசிக்கின்றனர். 4வது உலக மகளிர் மாநாடு பெய்சிங்கில் நடைபெற்ற போது, தாவோர் இனத்தின் காகிதக் கத்தரிப்புக் கலை பன்னாட்டு மகளிர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. காகிதக் கத்தரிப்பு கலை பற்றி அனுபவம் பெற்றுள்ள Su Mei அம்மையார் கூறியதாவது:

"தாவோர் இன மங்கையர், சிறு வயதிலிருந்து, காகிதக் கத்தரிப்பை நேசிக்கின்றனர். காகிதக் கத்தரிப்பு, அவர்களின் முக்கிய விளையாட்டுப் பொருளாகும். இதனை "Han Ni Ka" என அழைக்கின்றோம். தாவோர் இனத்தின் காகிதக் கத்தரிப்பு இரு வகைகளாக பிரிக்கப்படுகின்றது. ஒன்று, குறிப்பிட்ட பொருளை வெளிப்படுத்தல் என்னும் காகிதக் கத்தரிப்பு. மற்றொரு, மங்கலம் மற்றும் விருப்பக் குறிப்பு என்னும் காகிதக் கத்தரிப்பு" என்றார் அவர்.