உணவுப் பொருட்களின் பாதுகாப்பு, பொருட்களின் தரம் ஆகியவற்றுக்கு சீன அரசு அண்மையில் மேலும் முக்கியத்துவம் அளித்து, சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மீதான சர்வதேசச் சமூகத்தின் நம்பிக்கையை மீட்க, பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று சர்வதேசச் செய்தி ஊடகங்கள் அறிவித்துள்ளன. அண்மையில், பல உணவுப் பொருட்கள் பாதுகாப்பு விதிகள் மற்றும் வரையறைகளை சீனா வெளியிட்டு, தரக் கண்காணிப்பு முறைமையை மேம்படுத்தியுள்ளது. உணவுப் பொருட்களின் பாதுகாப்பு மீது சீன அரசு கவனம் செலுத்தத் துவங்கியதை இது காட்டுகின்றது என்று பிரெஞ்சு AFP செய்தி நிறுவனம் அறிவித்தது. கடந்த சில திங்களில், தரப் பிரச்சினையினால், சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் புகழ் பாதிக்கப்பட்டுள்ளது. சீனப் பொருட்களின் தொழில் சின்னங்களை பாதுகாக்க, சீன அரசு பாடுபடுவதை சீன அரசு வெளியிட்ட வெள்ளையறிக்கை வெளிப்படுத்துகின்றது என்று அமெரிக்க Associated Press செய்தி நிறுவனம் அறிவித்தது. உற்பத்திப் பொருட்களின் தரத்துக்குப் பொறுப்பாளராக, துணைத் தலைமையமைச்சர் வூ யி அம்மையாரை சீன அரசு நியமித்துள்ளமை, அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு துணை புரியும் என்று Financial Times என்னும் பிரிட்டன் செய்தியேடு கருதுகின்றது.
|