• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-30 16:54:18    
வட கிழக்கு பொருளாதார அதிகரிப்பு மண்டலம்

cri

கலை..............வணக்கம் நேயர்களே. இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் சீனாவின் வட கிழக்கு பகுதியை பொருளாதார அதிகரிப்பு பிரதேசமாக அமைப்பது பற்றி மதுரை 20 செந்திலும் தி கலையரசியும் நடத்திய உரையாடல்.
செந்தில்.........கலை. தமிழ் ஒலிபரப்பில் செய்தித் தொகுப்பு மூலம் சீனாவின் வட கிழக்கு பகுதியிலான வளர்ச்சி பற்றி கேட்டேன். வட கிழக்குப் பகுதியில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
கலை.........சீனாவின் வட கிழக்குப் பகுதியில் லியோ நின், ஜிலின், ஹெலுங்சியான் ஆகிய மாநிலங்கள் அடங்கும். அதன் நிலப்பரப்பு சுமார் 8 லட்சம் சதூர கிலோமீட்டராகும்.


செந்தில்..........இந்த மாநிலங்களில் அரசு சார் தொழில் நிறுவனங்கள் உள்ளனவா?
கலை........உண்டு. இந்த பிரதேசம் சீனாவின் பழையத் தொழிற்துறை தளமாகும். பல பெரிய ரக அரசு சார் தொழில் நிறுவனங்கள் இப்பிரதேசத்தில் அமைந்துள்ளன.
செந்தில்........பழையத் தொழில் நிறுவனங்கள் தவிர, வேறு வளங்கள் உண்டா?
கலை..........உண்டு. செழுமையான எண்ணெய், நிலக்கரி, இரும்பு போன்ற மூல வளங்கள் இப்பகுதியில் உள்ளான.
செந்தில்..........அப்படியானால் அங்கே தானியம் விளையுமா?
கலை.......அதுவா செழுமையான தாது பொருட்கள் தவிர, இந்த பிரதேசம் சீனாவின் முக்கிய தானியம் விளையும் பகுதிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில்........இந்த பிரதேசத்தின் வளர்ச்சிக்கு எதாவது இன்னலால் தடுக்கப்படுகிறதா?
கலை........இன்னல்கள் நிகழ்வது இயல்பே. எடுத்துக்காட்டாக கடந்த சில ஆண்டுகளில் தொழில் நிறுவனங்களின் குறைவான உற்பத்தி பயன், வேலையின்மை போன்ற பிரச்சினைகள் ஏனைய பிரச்சினைகளை விட கடுமையாக காணப்பட்டுள்ளன. சில வகை மூல வளங்கள் அழிவு விளம்பில் உள்ளன.
செந்தில்........நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளை எப்படி சீன அரசு தீர்க்க போகின்றது?


கலை....... உங்களது இந்த கேள்வி இன்றைய நிகழ்ச்சியின் மைய அம்சமாகும். வட கிழக்கை செயல் ஆற்றல் மிக்க பிரதேசமாக வளர்க்கும் நெடுநோக்கு திட்டத்தை சீன அரசு 2003ம் ஆண்டில் முன்வைத்துள்ளது. இது பற்றி சீனச் சமூக அறிவியல் கழகத்தின் தொழிற்துறைப் பொருளாதார ஆய்வு பணியகத்தின் ஆய்வாளர் ச்சௌ யின் கூறியதை கேளுங்கள்.
2003ம் ஆண்டு முதல் வட கிழக்கை குறித்து வெளியிடப்பட்ட கொள்கைகளில் சில ஆய்வு தன்மை வாய்ந்தவை. கடந்த சில ஆண்டுகளில் கொள்கைரீதியில் மேற்கொண்ட ஆய்வின் படி, வட கிழக்கு பிரதேசத்திலுள்ள பழையத் தொழிற்துறை தளத்தின் நிலைமை பெரிதும் மாற்றமடைந்துள்ளது என்றார் அவர்.
செந்தில்..........பழையத் தொழிற்துறை தளம் இருந்தால், அதற்கும் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சி சிறப்பு தன்மை வைக்கப்பட்டதா?
கலை........உங்கள் கேள்வி மிகச் சிறப்பானது. பழையத் தொழிற்துறைத் தளத்திற்கு குறிப்பிட்ட முழுமையான செயல்படுத்தக் கூடிய நெடுநோக்கு திட்டத்தை வகுக்க வேண்டும்.
செந்தில்........இது பற்றி எனக்கும் என்னை போன்ற நேயர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.


கலை.......பழையத் தொழில் நிறுவனங்கள் வளர வேண்டும் என்ற சூழ்நிலையில் வட கிழக்கை மறுமலர்ச்சி செய்வதற்கு பொறுப்பான சீன அமைச்சரவையின் பணியகம் அதன் தலைமையில் பல்வேறு வட்டாரங்களிடமிருந்து கருத்துக்களை கேட்டறிந்த அடிப்படையில் திட்டம் ஒன்றை வெளியிட்டது.