• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-30 17:05:17    
பாதான் ஜீலினிலுள்ள ஏரிகள்

cri

பாதான் ஜீலின் பாலைவனத்தில் ஏரிகளும், ஊற்றுகளும், மிகவும் சிறப்பான காட்சிகளாகும். இங்கு மொத்தம் 113 ஏரிகள் உள்ளன. இந்த உப்பு நீர் ஏரிகளின் கரையிலும், ஏரியின் மையப் பகுதியிலும் பெரிய சிறிய ஊற்றுமூலங்கள் உள்ளது மட்டுமின்றி, இனிமையான ஊற்று நீரும், உப்பு ஏரி நீரும் வேறுபட்டவை என்பது, குறிப்பிடத்தக்கவை. யின்தேழிது என்னும் உப்பு ஏரியில், ஊற்று மூலம் மிகவும் அதிகம். உள்ளூரின் மேய்ப்பர்களின் கூற்றின் படி, இந்த ஏரியில், 108 ஊற்றுமூலங்கள் உண்டு. இதில், MO PAN ஊற்றுமூலம், மிகவும் புகழ்பெற்றது. இவ்வுப்பு ஏரியின் மத்தியப் பகுதியிலுள்ள பெரிய கல்லில், இவ்வூற்றுமூலம் இருக்கிறது. இக்கல், ஒரு மீட்டருக்கு மேல் உயரமானது. இக்கல்லின் உச்சிப்பகுதியின் பரப்பளவு, சுமார் 3 சதுர மீட்டர். பல ஊற்றுமூலங்கள், அவற்றில் காணப்படுகின்றன. இதிலிருந்து ஊற்று நீர், திரை போல் கீழ் விழுகிறது. சுவையான ஊற்று நீர், மனிதருக்கும் காலதடைக்கும் பயன்படுத்தப்படும்.


பாலைவனத்தில் நீர் இருந்தால், உயிர்கள் இருக்கின்றன. பாதான் ஜீலினில், ஏரி உள்ள இடத்தில், மக்கள் வசிக்கின்றனர். பாதான் ஜீலின் பாலைவனத்தில் 30க்குக் கூடுதலான குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்கின்றன. ச்சாகான்கோ என்பவர், ஒரு மேய்ப்பர் ஆவார். அவருடைய வீடு, ஒரு சிறிய ஏரியின் பக்கத்தில் அமைந்துள்ளது. சில சதுர கிலோமீட்டர் சுற்றுப்புறத்தில், அவருடைய குடும்பம் மட்டும் உள்ளது. அவர் கூறியதாவது
எமது கிராமம், மேய்ச்சல் பிரதேசமாகும். இங்கு ஓட்டகங்களும், ஆடுகளும் வளர்கின்றன. ஒவ்வொரு ஏரியின் பக்கத்திலும் ஒரு குடும்பம் வசிக்கிறது. எமது கிராமத்தில் 30க்குக் கூடுதலான ஏரிகள் உள்ளன. மொத்தம் மக்கள் தொகை, நூற்றைத் தாண்டியது என்றார் அவர்.


இதுவரை, பாதான் ஜீலின் பாலைவனத்தில் வாழ்கின்றவர்கள், மாசுபடாத காற்று சுவாசித்து, தூய்மையான ஊற்று நீரைக் குடித்து, மாசுபடாத பழங்களையும் காய்கறிகளையும் உட்கொண்டு, அமைதியாகவும் நிறைவாகவும் வாழ்கின்றனர்.
அடுத்து, சுற்றுப்பயணத்துக்கான சில தகவல்கள்
பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு, விமானம் அல்லது தொடர்வண்டி மூலம், நிங்சியா குவே இனத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் யின் சுவான் நகரம் சென்றடையலாம். அதன் பிறகு, சுற்றுலா பேருந்து மூலம் உள்மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தின் அலசானை அடைந்த பின், உள்ளூரின் ஜிப் காரை மாற்றி, பாலைவனத்தின் மையப்பகுதிக்குச் செல்லலாம். இது, பாதான் ஜீலின் செல்லும் மிகவும் நல்ல சுற்றுலா நெறியாகும். ஆண்டின் ஆகஸ்டு திங்கள் முதல், அக்டோபர் திங்கள வரையான காலம், பாதான் ஜீலின் பாலைவனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான மிக நல்ல காலமாகும். உள்ளூரின் சராசரி வெப்ப நிலை, 25 டிகிரி செல்சியஸ்.