"திபெத் சுற்றுலா தகவல் இணைய தளம்" (http:// www. xzta.gov.cn) இன்று அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளது. திபெத் சுற்றுலா தகவல் மூலவளத்தின் சேவை மற்றும் நிர்வாகம் மின்னணு மயமாக்கத்தை நனவாக்கியுள்ளது என்பதை இது கோடிட்டுக்காட்டியுள்ளது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இணைய தளத்துக்கு தற்போது சீன மொழிப் பகுதி மட்டும் உண்டு. இனிமேல், ஆங்கில மொழிப் பகுதியும், ஜப்பானிய மொழிப் பகுதியும் திறக்கப்படும். தற்போது, இந்த இணைய தளம் முக்கியமாக தகவல் சேவையை வழங்கி, பிரச்சாரம் செய்கின்றது. இவ்வாண்டின் அக்டோபர் திங்கள் முதல், hotel, சுற்றுலா நிறுவனம், வாடகைக்கார், விமானச்சீட்டு ஆகியவற்றை இணையம் மற்றும் தொலைபேசி மூலம் பதிவு செய்வது நனவாகக்கூடும்.
|