• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-31 16:25:28    
சூவான் தைய் கோ என்ற கிராமம்

cri

அங்கே, கடற்கரையில் அன்பு என்னும் குழந்தைகள் காப்பகத்தை நிறுவினார். அவர்கள் தாலியேன் நகருக்கு அருகிலுள்ள சில சிறைகளுக்குச் சென்று அங்குள்ள குற்றவாளிகளின் குழன்தைகள் வளர்க்கு பொறுப்பை ஏற்பது தொடர்பான உடன்படிக்கையை அவர்களுடன் ஏற்படுத்தினார். அவர்களின் குழந்தைகளை சந்தித்து, தங்களது காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர். குழந்தைகள், இந்த காப்பகத்துக்குச் சென்ற பின், அருகிலுள்ள பள்ளிக்குச் சென்று கல்வி பயின்றனர். அவர்களுடைய வாழ்க்கை மற்றும் கல்விச் செலவை குழந்தைகள் காப்பகம் ஏற்கிறது.


இக்குழந்தைகள் பெற்றோரின் அன்பு இல்லாத நிலையில் வாழ்ந்ததால், மற்ற குடும்பங்களில் வாழ்கின்ற குழன்தைகளை காட்டிலும், குணாதிசயங்களஇல் சில மாற்றங்கள் இருக்கின்றன. குழந்தைகள் காப்பகத்தின் அன்னையர்களில் ஒருவரான யாங்மே செய்தியாளரிடம் இது பற்றி பேசுகையில், துவக்கத்தில் அவர்களுடன் பழகும் போது மிகக் கடினமாக இருந்தது என்றார். அவர் மேலும் கூறியதாவது
குழந்தைகள் வந்த துவக்கத்தில் பிறருடன் பழகுவதில் மிகவும் கவனமாக இருந்தனர் என்றார் அவர்
இருபத்தெட்டு வயதான யாங் மே, திருமணம் செய்யவில்லை. இக்குழந்தைகளின் தன்லைம் எண்ணம் எளிதில் கோபமடைதல் ஆகியவற்றை யாங் மே அன்புடன் அணுகி மாற்றினார். குழந்தைகள் காப்பகத்தில் ஹூய் வா என்பவர், திறமையான ஒரு ஆண் குழந்தையாவார்.
எட்டு வயதான போது, அவருடைய பெற்றோர், சர்ச்சையில் ஈடுபட போது தற்செயலாக அவரது தந்தை தாயைக் கொன்றார்.
இதனால், தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சமபவத்தால் ஹூய்வா பெரிதும் பாதிக்கப்பட்டார். முன்பு மகிழ்ச்சியுடன் காணப்பட்ட அவர், எளிதில் கோபமடைபவராக மாறினார். அவர் கூறியதாவது


அப்போது அந்த சம்பவம் நிகழ்ந்த பின், நான் என் தந்தை மீது கடுமையாக வெறுப்பு கொண்டேன். ஒரு மகிழ்ச்சியான குடும்பம், என் அப்பாவால் சீர்குலைக்கப்பட்டது. எல்லோரும் பெற்றோரின் அன்பை பெற முடிகிறது. என்னால் அது முடியாது என்றார் அவர்.