• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-31 16:41:23    
ஒலிம்பிக் பதக்கங்கள்

cri

2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றியாளர்களாக மேடையேறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் பதக்கங்களில் உள்ள தங்கம், செம்பு மற்றும் வெள்ளி ஆகியவை சிலி மற்றும் ஆஸ்திரேலியாவின் சுரங்கங்களிலிருந்து பெறப்படுகிறதாக அறியப்படுகிறது. பிஎச்பி பில்லிட்டன் என்ற நிறுவனம்தான் ஒலிம்பிக் பதக்கங்களுக்கான உலோகங்களை விநியோகம் செய்யவுள்ளது. சிலி நாட்டு ஆன்டொஃபகாஸ்டா பிரதேசத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் இரு சுரங்கங்களிலிருந்து தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களுக்கான உலோக மூலப்பொருள் பெறப்படும். ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லேன்ட் மாநிலத்தில் உள்ள இந்நிறுவனத்தின் மற்றொரு சுரங்கத்திலிருந்து வெள்ளி பதக்கத்தில் பயன்படுத்தப்படும் உலோக மூலப்பொருள் பெறப்படும். இந்த உலோக மூலப்பொருட்களைக் கொண்டு ஷாங்காயிலுள்ள சீன பண அச்சடிப்பு கழகம் பதக்கங்களை தயாரிக்கும். ஏறக்குறைய 6 ஆயிரம் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் 2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் போது வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும்.