• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-31 16:59:46    
பாதான் ஜீலின் பாலைவனம்

cri

பாதான் ஜீலின் பாலைவனம், உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்து அலசன் வலது மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது. அதன் மொத்த பரப்பளவு, நாற்பதேழாயிரம் சதுர கிலோமீட்டராகும். உலகின் 4வது பெரிய பாலைவனமாகவும், சீனாவின் மூன்றாவது பெரிய பாலைவனமாகவும் இது விளங்குகிறது. பாதான் ஜீலினில், எமது செய்தியாளர், மில் என்னும் இளம் பெண் பயணியைச் சந்தித்து, பேசினார். அவர், பாலைவனங்களில் பல முறை நாடாய்வு மேற்கொண்டார். ஆனால், பாதான் ஜீலின் செல்வது, இதுவே முதல் முறை. இங்குள்ள காட்சி பற்றி குறிப்பிடுகையில், அவர் தனது பாராட்டை வெளிப்படுத்துகிறார்.

பாலைவன கருமையாகும் போது, தரை மட்டத்தின் மேல் வானவில்லைப் போன்ற வண்ணங்கள், காணப்படலாம். மிக மிக அழகானது. நான் அதை நிழற்படம் எடுத்தேன் என்றார் அவர்.

பாதான் ஜீலின், மணல் குன்றுகள் தனிச்சிறப்பியல்புடைய இயற்கைக் காட்சியாகும். கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், பாலைவனத்தில் வலுவான காற்று வீசியதால், மணல் இடம்பெயர்ந்ததால், மேலும் உயரமான மணல் குவியல்கள் குன்றுகளாக உருவாக்கப்பட்டன. பாலைவனத்தின் மையப்பகுதியில், மணல் குன்றுகள், கடல் அலைகளைப் போன்றவை. கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரமுள்ள, பிலூது என்னும் மணல் குன்று, சீனாவிலும் உலகளவிலும் மிகவும் உயரமான மணல் குன்றுயாகும். பாலைவன இமய மலை சிகரம் என்று, இது அழைக்கப்பட்டது.