• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-31 17:19:07    
திபெத்திய லோ பா இன மக்களின் புதிய வாழ்க்கை

cri

தென்கிழக்கு திபெத்தின் மிங்லின் மாவட்டத்தில் நயி என்னும் இடத்தில், பரந்த வனப்பிரதேசத்தில், விவசாயக் குடம்பங்கள் வாழ்கின்றன. கூட்டம் கூட்டமாக ஆடுகளும் மாடுகளும் மலைச்சரிவுகளிலும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் புறகளை மேய்கின்றன. லோ பா இன மக்கள் சூழுமிவாழும் இடங்களில் ஒன்றான, திபெத்திய லின்சி பிரதேசத்து நயி லோ பா இன வட்டம், இதுவாகும்.


இவ்வட்டத்தில் மொத்தம் மூன்று நிர்வாக கிராமங்கள் உண்டு. 355 லோ பா இனத்தவர்கள் உட்பட, 453 குடிமக்கள் இவற்றில் வசிக்கின்றனர். 1985ம் ஆண்டில், பெரிய மலைகளிலிருந்து லோ பா இன மக்கள் வெளியேறி குடியெயர்ந்தனர். அவர்களுக்கென, அரசு, செ சௌ கிராமத்தை அமைத்தது. கிராமவாசிகள் பெரும்பாலானோர், பாரம்பரிய வேளாண்மையிலும், கால் நடை வளர்ப்பிலும் ஈடுபடுகின்றனர். கிராமத்திலுள்ள வீடுகள், கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகளில் கட்டப்பட்டதினால், இப்போது பார்ப்பதற்கு அவை பாழடைந்ததாகத் தோன்றின. விவசாயிகள்-ஆயர்களின் உறைவிட வசதிகளை மேலும் மேம்படுத்த, 2006ம் ஆண்டில், உள்ளூர் அரசின் 40 லட்சம் யுவான் நிதியுதவியுடன், இக்கிராமம், புரைமைக்கப்பட்டது. அடிப்படை வசதிகள், போக்குவரத்து, எரியாற்றல் நிர்மாணம் முதலியவற்றில், புத்தம் புதிய தோற்றம் காணப்பட்டுள்ளது. முதலில் நன்மை பெற்றவர்கள், செ சௌ கிராமத்தின் 36 குடும்பத்தினர்களே. அவர்கள் அனைவரும் புதிய வீடுகளில் குடியேறினர். நயி வட்டத்தின் அரசாங்க அதிகாரி 邓常松 கூறியதாவது:


"குடியிருப்புக்கான புதிய வரையறை, குடும்பத்தின் மக்கள் எண்ணிக்கை யால் தீர்மானிக்கப்படுகின்றது. 8 பேருக்கு மேல் என்றால், 117 சதுர மீட்டர் கட்டிட பரப்பு. சமையல் அறை இதில் அடங்கவில்லை. உடுதலாக 40 சதுர மீட்டர் பரப்பில் சமையல் அறை அமைந்துள்ளது. 8 பேருக்குள் என்றால், 112 சதுர மீட்டர் பரப்பிலான வீடு. வீடுகளின் வெளிப்புறத்தில், மரத் துண்டுகள் மூங்கில்கள் ஆகியவை ஓட்டப்படுகின்றன. வெளிப்புறத்திலிருந்து பார்க்கும் போது, லோ பா இன நடையுடை பாவனை வெளிக்காட்டப்படுகின்றது. இருப்பினும், உள்ளே நவீன சாதனங்கள் காணப்படுகின்றன. வசிப்பதற்கு மிகவும் வசதியானது" என்றார், அவர்.
"亚加 ஒரு சாதாரன லோ பா இன பெண்மணி. இவ்வாண்டு அவருக்கு 35 வயது. முன்பு, 6 பேர் அடங்கும் அவரது குடும்பம் 60 சதுர மீட்டர் பரப்புடைய ஒரு சிறிய வீட்டில் வசித்திருந்தது. வாழ்க்கை, வசதி" யாயில்லை. கடந்த ஆண்டு, அவர்கள் 112 சதுர மீட்டர் பரப்புடைய ஒரு பெரிய வீட்டில் குடியேறினர். அவர் கூறியதாவது:
"இப்போது நல்ல உறைவிட வசதியுள்ளது. முன்பு மழை பெய்ந்து கொண்டிருக்கும் போதெல்லாம், வீட்டில் மழை நீர் கசிந்தது. இப்போது வீடு, முன்பை விடப் பெரியது. படுக்கை அறையும் சமையல் அறையும் பிரிக்கப்படுகின்றன, நான் இப்புதிய வீட்டை மிகவும் விரும்புகின்றேன்" என்றார்.


முன்பு வாழ்க்கை மிகவும் இன்னலாக இருந்தது. இன்று, வீட்டில் இரண்டு யாக் எருதுகளை வளர்த்துள்ளதாகவும், வெப்ப அறையை கட்டியமைத்து இதில் காய்கறிகளை பயிரிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த ஆண்டு, கையால் இயக்கப்படும் டிராக்டர் ஒன்றை வாங்கி பரபரப்பான வேளான் பருவத்தில் இதைக்கொண்டு நிலத்தை உழுததாகவும், இப்போது, ஆண்டுதோறும் 8000 யுவான் வருமானம் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். அவரது நான்கு குழந்தைகளில் இருவர் மேனிலை பள்ளியில் பயில்கின்றனர். வேறு இருவர் பள்ளிக்கு போகவில்லை. இன்றைய வாழ்க்கை நிலை, அவருக்கு மிகவும் மனநிறைவு தருகிறது.
லோ பா இன மக்களின் வாழ்க்கை, முன்பை விட பெரிதும் வளமடைந்துள்ளது. டா மா, இக்கிராமத்தில் மிக முதியவர். இவ்வாண்டு அவருக்கு 66 வயதாகின்றது. முந்திய வாழ்க்கையை நினைவுகூர்ந்து அவர் உனர்ச்சிவசப்பட்டு கூறியதாவது:"விடுதலைக்கு முன், அவ்வப்போது வயிறாரச் சாப்பிடவில்லை. மனிதரும் கால்நடைகளும் பட்டின் கிடந்தனர். சிறு வயதில் நான் காலணியும் அணிய முடியவில்லை. பெரிய மலையிலிருந்து வெளியேறி குடிபெயர்ந்த பின், வாழ்க்கை மேம்பட்டுள்ளது. இப்போது எனது இரண்டு மகன்களும் கால்நடை வளர்ப்புப் பண்ணையில் பணி புரிகின்றனர். அரசு, எங்களுக்கு உதவியாக, தான்யமும் ஆடைகளும் வழங்குகின்றது" என்றார், அவர்.
லோ பா இன மக்களின் வாழ்க்கை வளமடைவதுடன், பல்வகை சமூக உத்தரவாத நடவடிக்கைகளும் முழுமையாகத் துவங்கியுள்ளன. இன்று செ சௌ கிராமத்தில் குழந்தைகள் அனைவரும் பள்ளிக்குச் செல்கின்றனர். கிராமப்புற ஒத்துழைப்பு மருத்துவ சிகிச்சையின் பரவல் விகிதமும் நூறு விழுக்காட்டை எட்டியுள்ளது. கடும் நோய்வாய்ப்படும் போது காப்புறுதி வழங்கப்படும். எனவே, மக்களின் வாழ்க்கை மேலும் அமைதியாகவும் வளமாகவும் உள்ளது.
கடந்த ஆண்டு முதல் உள்ளூர் அரசின் பெரும் ஆதரவுடன், சுற்றுலாத்துறை வளர்ந்துள்ளது. "லோ பா இன பழக்க வழக்க சுற்றுலா விழா மற்றும் திபெத்திய மருத்துவ மருந்தாக்கப் பண்பாட்டு விழா" நயி வட்டத்தில் நடைபெற்றது. லோ பா இனத்தின் தனித்தனிமை வாய்ந்த பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனை, உணவு, ஆடை, உள்ளூர் மூலவளம் ஆகியவை பயனிகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.
நயி வட்ட அரசாங்க அதிகாரி 邓常松 இது பற்றி கூறியதாவது

 
"முக்கியமாக பழக்க வழக்கம் பற்றிய சுற்றுலாவையும் குடும்ப ரீதியான சுற்றுலாவையும் வளர்த்துள்ளோம். லோ பா இன மக்களின் தற்போதைய உறைவிட வசதிகள் நன்றாக உள்ளன. பயனிகள் அவர்களின் வீடுகளில் வசித்த போது, லோ பா இன மக்களின் பழக்க வழக்கங்களையும் உணவு பழக்கத்தையும் நடையுடை பாவனையையும் நேரில் உணர்ந்து கொள்ளலாம். சுற்றுலாத்துறை, தொழில் கட்டமைப்பின் சரிப்படுத்தலை தூண்டியுள்ளது. வேளாண் தொழிலின் கட்டமைப்பும் இசைவாக சரிப்படுத்தப்படும்." என்று அவர் கூறினார்.