• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-03 21:53:16    
ஆர்வம் ஈர்க்கும் வெளிநாட்டு தேசிய விருந்துகள்

cri

மெக்சிகோவின் தேசிய விருந்து, மக்காச்சோளத்தை முக்கியமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இனிப்பு சுவை கொண்ட வாய்ந்த டோல்டிய என்னும் மக்காச்சோள ரொட்டி, இந்தியாவின் பரோட்டா போல் இருக்கிறது. இதைத் தவிர, இந்த அற்புதமான நாட்டில், உணவாக பயன்படுத்தக்கூடிய ஒரு வகை கள்ளி உட்கொள்ளும் வரலாறு, நீண்டகாலமானது. மெக்சிகோவின் தேசிய விருந்தில், மதிப்புக்குரிய விருந்தினர்களை உபசரிக்கும் போது பரிமாறப்படும் முக்கய உணவு வகை இதுவே ஆகும்.

ஸ்பெயின் செழிப்பான கடல் மூலவளம் கொண்டது. கடல் உணவுப்பொருட்கள் தேசிய விருந்துகளில் சுவையான உணவு வகையாகக் கருதப்படுகின்றன. பாயையா என்னும் ஒரு வகை கறி, உலகில் மிக புகழ் பெற்றது. உண்மையில், அரிசியுடன் சேர்ந்து பல கடல் மூல வளங்கால் தயாரிக்கப்படுகின்றது. அரசின் உயர் அதிகாரிகள், இதனை வெளிநாட்டு விருந்தினருகளுக்கு விருந்தளிக்கும் போது தந்து உபசரிக்கின்றனர்.

தேசிய விருந்து என்பது அதிகாரப்பூர்வமான ஒன்றாகும். உண்மையில், இது உணவுப்பொருட்களின் பண்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் எடுத்துக்காட்டுகிறது. பண்பாட்டுப் பின்னணிகள், நாடுகள் மற்றும் தேசிய இனங்களிடையில் வேறுபட்டதாக இருப்பதால், உணவுப்பொருட்களின் பழக்கங்கள் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றன. ஆகவே, பல்வேறு நாடுகளின் தேசிய விருந்துகள் பல்வேறு வடிவங்களில் காணப்படுகிறன.

அரபு நாட்டின் தேசிய விருந்தில் மிகவும் சுவையான, வரவேற்கப்படும் உணவுப்பொருட்கள் தீயில் வாட்டிய முழுமையான ஆடாகும். மேசையில் வைக்கப்பட்ட வாட்டிய ஆட்டிறைச்சிக்குப் பக்கத்தில், வெங்காயம், பிற மசாலா மற்றும் பொருட்களும் காணப்படுகின்றன. விருந்தினர்கள் இதை விருப்பப்படிமகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம்.

ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய விருந்துகள் மிகுந்த தனிச் சிறப்புப் பெறுகின்றன. ஆப்பிரிக்காவின் தீயில் வாட்டிய ஒட்டக இறைச்சி தேசிய விருந்தில் உணவுப்பொருளாக அமைகிறது. இது Mali வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டு அதிகாரிகளுக்கு விருந்தளித்து உபசரிக்கும் உணவுப்பொருட்களில் ஒன்றாகும். இதன் சுவை, மக்களின் மனதில் ஆழமாகப்பதித்து வருகின்றது. தீயில் வாட்டிய ஆட்டு, ஒட்டகத்தின் வயிற்றில் வைக்கப்படுகிறது. தீயில் வாட்டிய ஆட்டின் வயிற்றில் தீயில் வாட்டிய கோழி ஒன்று உள்ளது. இக்கோழியின் உள்ளே ஒரு காடை இருக்கிறது. மேலும் இந்த காடையின் வயிற்றில் ஒரு முட்டை இருக்கிறது. விருந்தினர்கள் இந்த ஒட்டக இறைச்சியைச் சுவைபார்க்கும் போது, புதிர் ஒன்றை ஊகிப்பதைப் போல் உணர்கின்றனர். அத்துடன், விருந்தளிப்பவர்களின் விருத்தோபலும், நகைச்சுவை உணர்வும் முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறன.

நண்பர்களே, இந்த வெளிநாட்டு தேசிய விருந்து என்று பண்பாடு தகவல் படித்த பின், உங்கள் கருத்து என்ன?உங்களுக்கு இந்நிகழ்ச்சி பிடித்ததாக அமைந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். நன்றி!மீண்டும் சந்திப்போம்.