• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-03 19:58:39    
சீனாவின் பறக்கும் மனிதனின் வெற்றி

cri

உலக சாதனை வீரரான, ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் சாம்பியன் சீனாவின் பறக்கும் மனிதன் என்றழைக்கப்படும் லியுசியாங், ஆகஸ்டு 31ம் நாளிரவு, ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற 2007ம் ஆண்டுக்கான உலக தடகள சாம்பியன்பட்ட போட்டியின் 110 மீட்டர் தடையோட்டத்தில் சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் 12.95 வினாடி என்ற நேரப்பதிவில் தங்கப் பதக்கத்தை வென்றார். இச்சாம்பியன்பட்ட போட்டியில் சீனா எட்டிய முதல் தங்கப் பதக்கம், இதுவாகும்.

இவ்வெற்றிக்கு முன்பாக, லியுசியாங், ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, சர்வதேச தடகள விளையாட்டு சம்மேளன விருது போட்டி, உலக சாம்பியன்பட்ட போட்டி ஆகியவற்றின் தங்க பதக்கங்களை பெற்றுள்ளார்.

மற்றொரு சீன வீரர் சிதூங்போங், 5வது இடம் பெற்று, தனது மிகச் சிறந்த சாதனையை உருவாக்கினார்.