
சீனாவில், பாரம்பரிய பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் காரணங்களால், வாழ்க்கையில் பாலியல் பற்றி பேசுவதை மக்கள் தவிர்க்கின்றனர். ஆகையால், பல இளைஞர்கள் குறிப்பாக பொருளாராத வளர்ச்சி குன்றிய பிரதேசங்களில் வாழும் இளைஞர்கள் தேவையான பாலியல் மற்றும் இனப்பெருக்கத் துறையிலான அறிவுகளை பெறுவது கடினம். சீன இளைஞர்களிடையில் எய்ஸ்ட் நோய் உள்ளிட்ட நோய்களைத் தொற்றும் விகிதம் அதிகரிப்பதற்கான காரணங்களில் இது ஒன்றாகும். அர்களிடையில் பாலியல் அறிவுகளைப் பரவல் செய்ய, தற்போது, இளைஞர்கள் பங்கெடுத்து, சேவை புரியும் ஒரு அமைப்பு சீனாவில் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றது. சீன இளைஞர் இணையம் என்பது இதன் பெயராகும்.

சீனக் குடும்ப நலத்திட்ட சங்கம், ஐ.நா மக்கள் தொகை நிதியம் ஆகியவற்றின் ஆதரவில் இந்த அமைப்பு 2004ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது. இதன் உறுப்பினர்கள் அனைவரும் பல்வேறு இடங்களைச் சேர்ந்த இளைஞர்களாவர். வடக்கு சீனாவின் சான் சி மாநிலத்தின் யாங் சுயேன் நகரைச் சேர்ந்த லீ காய் மின் இதன் முதலாவது தொகுதி உறுப்பினர்களில் ஒருவராவார். சீன இளைஞர் இணையத்தின் இலக்கு மிக தெளிவானது. அதாவது, சீனாவின் பல்வேறு பிரதேசங்களில் குறிப்பாக பொருளாதார வளர்ச்சி குன்றிய பிரதேசங்களில் வாழும் இளைஞர்களிடையில் பாலியல் நலவாழ்வு அறிவுகளைப் பரவல் செய்து, வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இன்னல்களையும் சமாளிக்க அவர்களுக்கு உதவி அளிப்பதாகும். ஆனால், நடைமுறையாக்கத்தில், இந்தப் பணி மிகவும் கடினமானது என்று இந்த அமைப்பின் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தமது ஊரில் பாலியல் நலவாழ்வு அறிவு பரவல் செய்வதில் அதிகமான தடைகளைச் சந்தித்துள்ளார் என்று லீ காய் மின் கூறினார்.

எனது ஊரில் பாலியல் பற்றி மக்கள் பேசுவதில்லை. இளம் தொழிலாளர்கள் அதிகமாக இருக்கும் ஒரு தொழிற்சாலையில் இது பற்றி இதன் முதலாளியுடன் விவாதித்தோம். ஆனால், அவர் இதனை உறுதியாக மறுத்தார். இளைஞர்களுடன் பாலியல், பாலியல் நலவாழ்வு பற்றி விவாதிப்பதை அவர் உறுதியாக எதிர்க்கின்றார். நாங்கள் பல முறைஅறிவுறுத்திய பின் தான், எமது நடவடிக்கையில் கலந்து கொண்டு, பயிற்சிகளை பெற, இறுதியில் அவர் 2 இளைஞர்களுக்கு அனுமதி அளித்தார் என்றார் li hai min. இது போன்ற நிலைமை அடிக்கடி நிகழ்வதுண்டு. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக, பணியாளர்கள் பிரச்சாரம் செய்வது, பயிற்சி நடவடிக்கைகளை நடத்துவது ஆகிய வடிவங்கள் மூலம், தற்போது, சீன இளைஞர் இணையம் என்ற அமைப்பு யாங் சுயேன் நகரில் குறிப்பிடத்தக்கவாறு புகழ் பெற்றுள்ளது. நடவடிக்கைகளின் மூலம், பல இளைஞர்கள் இளமை காலத்திலான நலவாழ்வு அறிவுகளைப் பெற்றுள்ளனர்.

|