• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-04 11:57:59    
இங்கிதங்கள்

cri
நான்கு பேர் கூடுமிடத்தில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது பொதுவாகவே மற்றவரால் கூர்மையாக கவனிக்கப்படுகிறது. விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை வைத்தே மக்கள் நம்மை பற்ரி கணித்துவிடுகின்றனர். இவன் பண்பட்டவன், இங்கிதம் தெரிந்து நடந்துகொள்ளும் கண்ணியமுள்ளவன் என்று நல்லபடி நம்மை பற்றிச் சொல்லவும், சரியான காட்டுவாசி, கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாமல், பண்பற்ற முறையில் நடப்பவன் என்று நம்மை பற்றி மக்கள் குறை சொல்லவும் செய்கின்றனர். இந்த மற்றவர்களில் நாமும் அடக்கம். நாமே கூட இப்படித்தான் மற்றவர்களை எடை போடுகிறோம் அல்லவா?
பொதுவாகவே சமூகத்தில் இதுபோன்ற ஒரு சில எதிர்பார்ப்புகள், வரையறைகள் இருக்கத்தான் செய்கின்றன.இது அனைத்து பண்பாட்டிலும் காணக்கூடிய ஒன்றே. அதிலும் குறிப்பாக உணவு தொடர்பான சில இங்கிதங்கள், நன்னடத்தை பெரும்பாலான நாடுகளின் பண்பாடுகளில் ஊறிக்கிடக்கின்றன. அவை இன்றளவும் பெரிதும் போற்றப்பட்டு நடைமுறை செயல்பாடுகளின் வழியே பேணப்படுகின்றன.
வாழை இலையில் சாப்பிடமால், நம் பக்கமாக மூடினால் ஒன்று, எதிர்பக்கமாக மூடினால் மற்ரொன்று என இருவேறு அர்த்தங்கள். இதைப்போல, சீன உணவு பழக்கங்களின் பல நுட்பமான அம்சங்கள், பொருள் பொதிந்து கவனமுடன், பேணப்படுகின்றன. அவற்ரில் முக்கியமான சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
பொதுவாகவே குடும்பமாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம், உலகின் பல்வேறு நடுகளில் பெரிதும் விரும்பி போற்றப்படுகிறது. இன்றைய அவசர வாழ்க்கையில் இந்த குடும்பமாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
குடும்பமாக அல்லது குழுவாக அமர்ந்து சாப்பிடும்போது, நம் நாட்டிலும் சரி, மேற்குலகிலும் சரி, உணவு வகைகள் தனி பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும். அவற்ரிலிருந்து நாம் நமது தட்டில் தேவையானதை எடுத்து வைத்து சாப்பிடுவோம், அல்லவா?
ஆனால் சீனாவில் இந்த் ஔணவு பாத்திரங்கள் இருக்க, அனைவருமே அவற்றிலிருந்து தங்களது சாப்ஸ்டிக்ஸ், குச்சிகளை பயன்படுத்தி சாப்பிடுகின்றனர். அதாவது பகிர்ந்து உண்பதை அழகாக கடைபிடிக்கின்றனர் சீனர்கள். இஸ்லாமிய மக்கள், இப்படி சாப்பிடுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால் இங்கே சீன உணவு வழக்கத்தில் இதில் கூட சில நுண்ணிய சங்கதிகள் உண்டு. சாப்ஸ்டிக்ஸ் எனப்படும் குச்சிகளை பயன்படுத்தி சாப்பிடும் சீனர்கள், எடுத்தேன், கவிழ்த்தேன், என்று உடனே சாப்பிட துவங்குவதில்லை.
குடும்பத்தில் முத்த நபருக்கு அல்லது அங்கே அமர்ந்து சாப்பிடுபவர்களில் மூத்த நபருக்கு மரியாதை தரும் வகையில், அமரும் இருக்கைகளே கூட ஒரு குறிப்பிட்ட நெறியில் அமைந்திருக்கும். யார் எங்கே அமர்வது என்பதே கூட மிக முக்கியம். இது மேலை நாட்டு பழக்கவழக்கங்கலிலும் உண்டு என்றாலும், அங்கே பெரும்பாலும் சதுர அல்லது செவ்வக வடிவில் காணப்படும் மேசையில், ஒரு நபருக்கு முக்கியத்துவம் தந்து அமரச்செய்வது எளிதே. ஆனால் சீனாவில் அனைவரும் சமமே என்பதை உணர்த்தும் வட்ட வடிவ மேசைஅயை பயன்படுத்திய போதும், அதிலும் மூத்தவருக்கு உரிய மரியாதை தரும் வகையில் இருக்கையை ஒழுங்கு செய்யும் வழக்கம் வியப்பானது.
என்னடா இது பல முக்கிய விடயங்கள் இருக்கும்போல, இதையெல்லாம் எப்படி நாம் கவனத்தில் வைப்பது என்று குழம்ப வேண்டாம். சீனரல்லாதவர் அதாவது வெளிநாட்டினர் தம்மோடு அமர்ந்து உணவருந்தினால் , சீனர்கள் அவர்களுக்கு தம்முடைய பண்பாடும், பழக்க வழக்கங்களும் தெரியாது என்பதை அறிந்து, தங்களது வழக்கங்களை நம்மீது திணிக்காமல், நம்மை மனம் கோணாமல் பார்த்துக்கொள்ள பெரிதும் முயற்சிப்பார்கள்.
சொந்த் ஆனுபவத்தில் இதை நான் பலமுறை அறிந்து வியப்படைந்துள்ளேன். மேலும் சீனர்கள் விருந்துக்கு அழைத்தால். முதலில் நம் கண்கள் நிறையும் பின் வயிறும் நிறையும், அவ்வளவு உணவுவகைகள் மேசையில் வலம் வருவதை நாம் காணலாம். உணவும், உற்சாக பானமும், மகிச்சியான் சிரிப்பொலியும் நீண்டநேரம்