• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-04 11:35:33    
நேரம் நிகழ்ச்சியின் கருத்துகள்

cri

க்ளீட்டஸ்: ஆம். சீன வானொலி தமிழ்ப்பிரிவின் பணி, 45வது ஆண்டின் புகுமுகத்தில் நிற்கையில், இந்த நேயர் நேரம் நிகழ்ச்சி ஒலியேறுவதை நினைத்து நானும் மகிழ்ச்சியடைகிறேன்.


கலை: 44 ஆண்டுகள் வேகமாக உருண்டோடிவிட்டன. இத்தனை ஆண்டுகளும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு, தவறாமல் அவற்றை பற்றி ஓரிரு வார்த்தைகளாவது எழுதி, எங்களை ஊக்குவித்து, மகிழ்வித்த நேயர்களாகிய உங்கள் அனைவருக்கும் இன்றைய நிகழ்ச்சியின் மூலம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
க்ளீட்டஸ்: நிகழ்ச்சியில் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த பாத்திமா சர்மிளா எழுதிய கடிதம். நீங்கள் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளில் விளையாட்டுச் செய்திகள், சீனப்பாடல்கள், அறிவியல் உலகம், நலவாழ்வு பாதுகாப்பு ஆகியவை என்னைக் கவர்ந்தவை. இந்நிகழ்ச்சிகளில் வரும் தகவல்கள் எனக்கு பயனுள்ளவையாக உள்ளன. உங்கள் அனைவரது குரலும் இனிமை. குரல் கேட்ட உங்கள் அனைவரது முகம் காண ஆவல் என்று எழுதியுள்ளார்.
கலை: சேந்தமங்கலம் ஏ. திருவேங்கடம் ஆச்சாரியார் எழுதிய கடிதம். ஒலிம்பிக் போட்டியின்போது பிறமொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கேட்டோம். 2008 ஒலிம்பிக் போட்டியின்போது பல நாடுகளிலிருந்து பலமொழி பேசும் மக்கள் வருகை தருவதால், அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பல மொழி தெரிந்த சீனர்கள் வழிகாட்டியாக உதவ தேர்வு செய்யப்படுவார்கள். ஒலிம்பிக் போட்டிக்காக தன்னையும், மக்களையும் தயார் செய்து வரும் சீன அரசின் பணிகளை அறிய முடிகிறது என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து சென்னை மறைமலை நகர் சி. மல்லிகாதேவி சீனப்பண்பாடு நிகழ்ச்சி குறித்து எழுதிய கடிதம். சீனாவில் உள்ள மகாமணி ஆலயம் பற்றி விரிவாக சீனப் பண்பாடு நிகழ்ச்சியின் மூலம் அறிந்தேன். 46.5 டன் எடைகொண்ட அந்த மணியை பற்றிய வர்ணனை சிறப்பாக இருந்தது. மணீயின் அருகில் இருந்து பார்த்து ரசித்தது போல் இருந்தது. விழிப்புணர்வு மணி என்று கூறிய தகவலையும் கேட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


கலை: சீன மகளிர் நிகழ்ச்சி பற்றி திருவாணைக்காவல் ஜி. சக்ரபாணி எழுதிய கடிதம். சீனாவில் முதியோரின் எண்ணிக்கை பதினான்கு கோடி. முதியோர் நல்ல முறையில் வாழ, காப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாடும், முதியோருக்கு ஓய்வூதியம் வழங்க சீன அரசு செய்த முடிவும் வரவேற்கத் தக்கவை. உடல்நலம் குன்றியோருக்கு மருந்து வாங்க் உதவி, முதியோருக்கு சேவை செய்யும் தாதி, முதியோருக்கு சேவை செய்வது மனநிறைவு தருவதாகக் கூறினார். குடும்பத்தினர் கூட இப்படி செய்ய முடியாது. அவர்களை பாராட்டவேண்டும் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து நீர்குந்தி நேயர் இல. சின்னப்பையன் எழுதிய கடிதம். நட்புப்பாலம் நிகழ்ச்சியில் திருமதி. ராஜேஸ்வரி, திரு. ராதாகிருஷ்ணன் ஆகியோரில் பேட்டியின் முதல் பகுதியைக் கேட்டேன். கண் சம்பந்தமான கருவிகள் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத்தை அவர்கள் நடத்தி வருவதை அறியமுடிந்தது. தமது நிறுவனத்தின் தயாரிப்புகளை வெளிநாடுகளில் வர்த்தகம் செய்யவும், தற்போது சீனாவில் அறிமுகம் செய்யவும் முயன்று வரும் தகவல்களை அறிந்தோம். அவர்களது பனி சிறக்க வாழ்த்துக்கள்.
கலை: அடுத்து மட்டக்களப்பு மு. அ. பா. ஜெல்ஷானா எழுதிய கடிதம். சீன வானொலியின் ஒரு மணி நேர தமிழ் நிகழ்ச்சிகளைக் கேட்டு சீன நாட்டைப் பற்றியும் சீன வானொலியின் பெருமை பற்றியும் அறிந்து பெருமிதம் அடைகிறேன். சீன வானொலியில் புதன் கிழமைகளில் ஒலிபரப்பாகும் நேயர் நேரம், நேருக்கு நேர் மற்றும் சனிக்கிழமையில் ஒலிபரப்பாகும் நேயர் கடிதம் ஆகியவற்றை விரும்பிக் கேட்பேன். சர்வதேச அளவில் வளர்ந்து நிற்கும் சீன வானொலியில் நானும் நேயராக மாற விரும்புகிறேன் என்று எழுதியுள்ளார்.
அன்பு ஜெல்ஷானா, தங்களின் ஆர்வத்திற்கு நன்றி. சீன வானொலிக் குடும்பம் உங்களை வரவேற்கிறது.

 
க்ளீட்டஸ்: அடுத்து மே 4ம் நாள் ஒலிபரப்பான சீனாவின் மேற்கு பகுதியில் தொண்டர்கள் சேவை என்ற செய்தித் தொகுப்பு குறித்து கம்பம் இருதயராஜ் எழுதிய கடிதம். சீனாவின் உயர்கல்வி நிலையங்களில் கல்வி பயின்ற மாணவர்களை தேர்ந்தெடுத்து சீனாவின் மேற்கு பகுதிக்கு அனுப்பி பொருளாதாரம், கல்வி, சுகாதாராம், வேளாண்மை ஆகிய துறைகளில் ஈடுபட்டு மேற்கு பகுதியை முன்னேற்ற தொண்டர் படை பங்காற்ற உள்ளதை அறிந்தோம். மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.