• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-05 11:26:54    
தமிழ் மூலம் சீனம் பாடம் 96

cri

வாணி - க்ளீட்டஸ். கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டது உங்கள் நினைவில் இருக்கிறதா?

க்ளீட்டஸ் – வீட்டில் தொடர்ந்து பயிற்சி செய்கிறேன். கேளுங்கள். கடந்த வாரம் முக்கியமாக 火车 huo che, தொடர் வண்டி என்ற சொல்லுடன் தொடர்பான 3 வாக்கியங்களைக் கற்றுக்கொண்டுள்ளோம்.

வாணி – ஆமாம். முதலில்去上海的火车. Qu shang hai de huo che

க்ளீட்டஸ் --去上海的火车. Qu shang hai de huo che.
ஷாங்காய்க்குச் செல்லும் தொடர்வண்டி.

வாணி – இங்கே இடத்தின் பெயரை மாற்றலாம். எடுத்துக்காட்டாக, 去北京的火车. Qu Bei jing de huo che .

க்ளீட்டஸ் --去北京的火车. Qu Bei jing de huo che . பெய்ஜிங்கிற்குச் செல்லும் தொடர் வண்டி.

வாணி ---去晨耐的火车. Qu Chennai de huo che .

க்ளீட்டஸ் --去晨耐的火车. Qu Chennai de huo che . செனனைக்குச் செல்லும் தொடர்வண்டி.

வாணி – நல்லது. அடுத்து, தொடர் வண்டியின் எண்ணுக்குப் பிறகுச் சொல்ல வேண்டிய வார்த்தை--次 ci,

க்ளீட்டஸ் --次 ci,

வாணி – இது உங்களுக்கு கொஞ்சம் கஷ்டம் என்று கண்டுப்பிடித்துள்ளேன். என்னைப் பின்பற்றி மீண்டும் ஒரு முறை வாசியுங்கள். 次 ci,

க்ளீட்டஸ் --次 ci,

வாணி --请 问,去上海的火车一天有几趟? Qing wen, qu shanghai de huo che yi tian you ji tang? Qing wen, தயவு செய்து, 去上海的火车 ஷாங்காய்க்குச் செல்லும் தொடர் வண்டி, yi tian , ஒரு நாளில், ji tang, எத்தனை. 请 问,去上海的火车一天有几趟? Qing wen, qu shanghai de huo che yi tian you ji tang?

க்ளீட்டஸ் -- 请 问,去上海的火车一天有几趟? Qing wen, qu shanghai de huo che, yi tian you ji tang?

வாணி --两 趟, liang tang

க்ளீட்டஸ் --两 趟, liang tang. இரண்டு.

வாணி -- 十三次和二十一次. Shi san ci he er shi yi ci.

க்ளீட்டஸ் --十三次和二十一次. Shi san ci he er shi yi ci.
13வது எண் வண்டியும் 21வது எண் வண்டியும்.

வாணி – மேலும், நாங்கள் 3 இறுதி ஒலிகளையும் கற்றுக்கொண்டோம். என்னைப் பின்பற்றி வாசியுங்கள்.

வாணி – an

க்ளீட்டஸ் -- an

வாணி – 4 தொனிகளுடன். an an an an

க்ளீட்டஸ் -- an an an an

வாணி – அடுத்து, en

க்ளீட்டஸ் – en

வாணி – en, en, en, en

க்ளீட்டஸ் -- en, en, en, en

வாணி – அடுத்து, in

க்ளீட்டஸ் – in

வாணி – in, in, in, in.

க்ளீட்டஸ் -- in, in, in, in.

வாணி – புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளத் துவங்கலாம்.
多长时间到上海? 多长时间, எவ்வளவு நேரம். Duo chang shi jian dao shanghai?

க்ளீட்டஸ் --多长时间到上海?Duo chang shi jian dao shanghai?
ஷாங்காய்க்கு போவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

வாணி – மீண்டும் ஒரு முறை. 多长时间到上海? 多长时间, எவ்வளவு நேரம். Duo chang shi jian dao shanghai?

க்ளீட்டஸ் --多长时间到上海?Duo chang shi jian dao shanghai?
ஷாங்காய்க்கு போவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?

வாணி – 十二个小时左右。十二个 , 12, 小时,மணி, 左右,சுமார். 十二个小时左右, shi er ge xiaoshi zuo you.

க்ளீட்டஸ் --十二个小时左右。shi er ge xiaoshi zuo you. சுமார் பன்னிரண்டு மணி நேரம்

வாணி --- மீண்டும் ஒரு முறை. 十二个小时左右。shi er ge xiaoshi zuo you.

க்ளீட்டஸ் --十二个小时左右。shi er ge xiaoshi zuo you. சுமார் பன்னிரண்டு மணி நேரம்

வாணி – 十三次几点开车。 几点 எப்பொழுது, எந்த மணி நேரத்தில்.
Shi san ci ji dian kai che.

க்ளீட்டஸ் --十三次几点开车。Shi san ci ji dian kai che.
13வது எண் வண்டி எப்பொழுது புறப்படும்?

வாணி – மீண்டும் ஒரு முறை, 十三次几点开车。Shi san ci ji dian kai che.

க்ளீட்டஸ் --十三次几点开车。Shi san ci ji dian kai che.
13வது எண் வண்டி எப்பொழுது புறப்படும்? 

வாணி -- இனி, உச்சரிப்பு நேரம். க்ளீட்டஸ், நீங்களும், நேயர்களும் என்னைப் பின்பற்றி வாசியுங்கள்.

க்ளீட்டஸ் – சரி.

வாணி – un

க்ளீட்டஸ் – un

வாணி -- மீண்டும் ஒரு முறை, un

க்ளீட்டஸ் – un

வாணி – 4 தொனிகளுடன் un, un, un,un

க்ளீட்டஸ் – un, un un un

வாணி – அடுத்து, un. இது தமிழ் உச்சரிப்பில் இல்லாத உச்சரிப்பாகும். நீங்கள் கவனமாகக் கேளுங்கள். Un

க்ளீட்டஸ் – un

வாணி -- மீண்டும் ஒரு முறை, un

க்ளீட்டஸ் – un

வாணி – 4 தொனிகளுடன் un, un, un,un

க்ளீட்டஸ் – un, un un un

வாணி – சரி, நேயர்களே. நீங்கள் தவறாமல், வீட்டில் பயிற்சி செய்யுங்கள்.

1 2