ச்சி தேசத்து மன்னனுக்கு ஒரு சந்தேகம். தனது அரசவை ஓவியரை அழைத்தான்.
"ஐயா, ஓவியரே, நீங்க எத்தகனையோ படங்கலை வரைஞ்சிருக்கீங்க. எந்தப் படம் வரைவது கடினம்?"
"மன்னா, நாய், குதிரை இவற்றை வரைவதுதான் கடிடமானது."
"எந்த படத்தை மிக எளிதாக வரையலாம்?"
"சந்தேகமென்ன? பேய் படங்களை சுலபமா வரைந்து விடலாம்."
"என்னய்யா குழப்புவிறீரே. கண்ணால பார்க்கிற விவுயங்களை—நாய், பூனை இவற்றை வரைவதுதானே சுலபமாக இருக்க வேண்டும்."
"அரசே, நாய், பூனை, குதிரை இவற்றை தினந்தோனும் நீங்க பார்க்கிறீங்க. எல்லோரும் பார்க்கிறாங்க. தப்பா வரைஞ்சிட்டா நீங்க நாலுகனசயடி தருவீங்க. பேய் நீங்க பாத்திருக்கீங்களா?"
"இல்லை இல்லவே இல்லை." என்று மன்னர் தலையாட்டினார்.
"ஆமாம் மன்னா, நானும் பேயைப் பார்த்ததில்லை. அப்புறம் பேய்க்கு ஒரு வடிவம் கிடையாது. அது ஆவிதானே. அதனால ஏதாவது ஒரு கோட்டைப் போட்டு இதுதான் பேய்னு நான் சொன்னா நீங்க நம்பித்தானே ஆகணும்."
|