• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-05 12:54:18    
உள்மங்கோலியாவின் உயிரின வாழ்க்கைச் சூழல் கட்டுமானம்

cri

சீனாவின் உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசம் பற்றி குறிப்பிடுகையில், உங்கள் கண்களின் முன் அழகான காட்சிகள் நிழலாடும்—நீலமான வானத்தின் கீழ், விசாலமான புல்வெளியில், வெண்ணிற ஆடுகள் தாராளமாக புற்களை மேய்கின்றன. மங்கோலிய இன ஆயர்கள் ஆடுகளை துரத்தியதோடு உச்ச தொனியிலும் உரத்த குரலிலும் மேய்ச்சல் பாடலை பாடுகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில், உலகளவிய காலநிலை வெப்பமாகி வருவதாலும், புல்வெளி பிரதேசத்தில் மக்கள் தொகை அளவுக்கு மீறி அதிகரிக்க, மனிதரின் நியாயமற்ற பயன்பாடு அதிகரிப்பதாலும், உங்மங்கோலிய புல்வெளியில், பாலைவன மயமாக்க மற்றும் சீரழிவு நிலைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் உள்மங்கோலிய மக்களுக்கு இது எச்சரிக்கை மணி அடித்தது. எனவே, அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களது தாயகத்தைக் காப்பாற்றத் துவங்கினர்.

AO LI KE என்னும் இடம், உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள XI LI GUO LE புள்வெளியில் அமைந்துள்ள ஒரு சிற்றூராக இருந்தது. இங்கே வாழும் மக்கள் முக்கியமாக நாடோடி வாழ்க்கை நடத்துகின்றனர். கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தினால், ஆயர்கள் நம்பி வாழும் இந்த புல்வெளி பாலைநிலமாக மாறத் துவங்கியது. சில ஆண்டுகளிலேயே, இங்கே எல்லையற்ற பாலைவனம் மட்டுமே எஞ்சியது.

உள்மங்கோலியாவில், பாலைவன மயமாக்கம் கடுமையாக ஏற்பட்ட இடம் AO LI KE சிற்றூர் மட்டுமே இல்லை. இந்த இடங்களிலுள்ள ஆயர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதோடு, பாலைநிலத்தைக் கட்டுப்படுத்தி, தாவர வளர்ச்சியையும் மீட்கும் பொருட்டு, உள்மங்கோலியத் தன்னாட்சி பிரதேச அரசு 2002ஆம் ஆண்டில் தொடங்கி, உயிரின வாழ்க்கைக்கான இடப்பெயர்வுக் கொள்கையை மேற்கொண்டது. பாலைவன மயமாக்கம் மற்றும் சீரழிவு கடுமையாக ஏற்பட்டுள்ள இடங்களிலுள்ள ஆயர்கள் இடம் பெயர்க்கப்பட்டனர்.

NA MU HAI என்பவரும் AO LI KE சிற்றூரிலுள்ள ஏனையோரும், SANG GEN DA LAI என்ற நகருக்கு அருகில் இடம்பெயர்ந்தனர். உள்ளூர் அரசின் ஆதரவுடன், அங்கே இடம்பெயர்ந்த ஆயர்கள் கடன் மூலம் பசு மாடுகளை வாங்கி, சிறப்பு மாடு வளர்ப்புக் குடும்பமாகியுள்ளனர். பட்டிக்குள்ளான பசு மாடு வளர்ப்பு முறை, முன்பிலிருந்து வேறுபட்டது. தற்போது, உள்ளூர் அரசின் ஏற்பாட்டில், NA MU HAI தமது மனைவி, மகள், மகன், மருமகள் ஆகியோருடன் இணைந்து செங்கல்லால் கட்டப்பட்ட வசதியான வீட்டில் வாழ்கிறார். தமது குடும்பத்தின் ஆண்டு வருமானம் 40 ஆயிரம் யுவானை எட்டக் கூடும் என்று அவர் செய்தியாளரிடம் கூறினார். ஒவ்வொரு நாளும் வெளியே போகும் போது மஞ்சள் மணலுடன் போராட தேவையில்லை என்பது அவருக்கு மேலும் பெரும் மகிழ்ச்சி தருகிறது. அவரின் பேரன் தொடர்ந்து பள்ளியில் படிக்கலாம். நோய்வாய்ப்பட்ட குடும்பத்தினர் மருத்துவ மனைக்குச் செல்வதும் மேலும் வசதியாக உள்ளது.

NA MU HAI வாழ்ந்த அந்த பாலைநிலம், உள்மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தின் உயிரின வாழ்க்கைச் சூழல் கட்டுப்பாட்டுக்கான நெடுநோக்குத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பாலைவன மயமாக்கம் மற்றும் சீரழிவு கடுமையாக உள்ள பகுதி, குடியேற்றம் மற்றும் மேய்ச்சல் தடுப்புப் பகுதியாக அழைக்கப்படுகிறது. அதாவது, இப்பகுதியில் குடியிருந்த மக்களை இடம்பெயர்ப்பதோடு மேய்ச்சல் தடுப்புக் கொள்கையும் மேற்கொள்ளப்படும். அத்துடன், மரம் நடும் பணியையும் காடு வளர்ப்புப் பணியையும் மேற்கொள்ள வேண்டும்.

NA MU HAIஇன் ஊர் மட்டுமே மீட்கப்பட்ட புல்வெளி அல்ல. உள்ளூர் அரசு மற்றும் மக்களின் முயற்சியுடன், 2001ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரையான 5 ஆண்டுகாலத்தில் மட்டும், உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஒரு கோடியே 66 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பிலான பாலைநிலங்கள் கட்டுப்படுத்தப்பட்டு புல்வெளிகள் மீட்கப்பட்டுள்ளன. 19 உயிரின வாழ்க்கைச் சூழலுக்கான முன்மாதிரி மண்டலங்களும் 125 இயற்கை பாதுகாப்பு மண்டலங்களும் நிறுவப்பட்டுள்ளன.

Sea Buckthorn

பாலைவனக் கட்டுப்பாட்டுப் போக்கில், தனியான உயிரின வாழ்க்கைச் சூழலால ஏற்படும் பயனை, எவ்வாறு பொருளாதாரப் பயனாக மாற்ற முடியும் என்பதை உள்மங்கோலிய மக்கள் சந்திக்கத் துவங்கினர். சில ஆண்டுகால ஆராய்ச்சி மூலம், மணல்-புல் தொழிலை வளர்க்கும் வழியை உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசம் உருவாக்கியுள்ளது.

TIAN JIAO உணவு நிறுவனம், மணல் பிரதேசத்தில் வளரக் கூடிய தாவரமான Sea Buckthornஐ பயன்படுத்தி, புதிய உணவுப் பொருட்கள், சுவையூட்டிகள், பானங்கள் ஆகியவற்றை வளர்க்கும் தொழில் நிறுவனமாகும். Sea Buckthorn தொழிலை வளர்ப்பதன் மூலம், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமான அதிகரிப்பு தூண்டப்பட்டுள்ளது என்று இந்நிறுவனத்தின் பொது மேலாளர் LI YUN FEI செய்தியாளரிடம் கூறினார்.