• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-06 15:07:52    
மேற்கு மலைகள்

cri

பெய்ஜிங் புறநகரிலுள்ள மேற்கு மலைகள் என்பது சுகந்த மலைகள் நீல முகில் ஆலயம் செரி பள்ளத்தாக்கு துயிலும் புத்தர் ஆலயம் எட்டுக் கோயில் தலம் என்ற ஐந்து முக்கிய கவர்ச்சிகளை உடையது. இந்த மேற்கு மலைகளுக்கு ஒரு முறை பயணம் செய்வது, நகரத்தின் இரைச்சலிலிருந்து மனதுக்கு ஓர் ஓய்வு கொடுப்பதாக அமைகின்றது. சிற்றாறுகள் சலசலத்து ஓடுகின்ற அமைதியான சோலைவனக் காட்சியை ஆலயங்களின் அரும் கலை அமைப்புகள் மட்டும் இடையிடையே மறைக்கின்றன. காலங்களின் மாற்றங்களுடன், அப்பூங்காவின் காட்சிகளும் மாற்றமடைந்து ஆண்டு பூராவும் விடுமுறைப் பயணிகளை விடாது அழைக்கின்றன.

இருந்தும், மலைகள், செந்தளிர்களால் தீச் சுவாலை போல் காட்சியளிக்கும இலையுதிர்காலப் பிற்பகுதி தான், அங்குச் செல்வதற்கு மிகச் சிறந்த பருவம் ஆகும். மேற்கு மலைகளின் இன்னொரு பகுதியில் பரந்துள்ள எட்டுக் கோயில்களும் உல்லாசப் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றன. அவ்விடத்தின்

தரைக்காட்சியும் மலர்ச் செடிகளும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. வரலாற்று ரீதியில், மேற்கு மலைகள் ஜப்பானிய எதிர்ப்புப் போரிலும் விடுதலைப் போரிலும் கொரில்லா தளங்களாக விளங்கின. எண்ணற்ற இளைஞர்கள், இந்த மலைகளுக்குச் சென்றே புரட்சிப் படைகளில் சேர்ந்தார்கள் என்பது வரலாறு.

நுழைவுச் சீட்டு விலை: அதிக பயணிகள் உள்ள சுற்றுலாக் காலம் : 10 யுவான், பயணிகள் குறைவான காலம் : 5 யுவான் (மாணவர்களின் நுழைவுச் சீட்டு விலை:அரை விலை)

பூங்கா திறக்கப்படும் நேரம் : காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை

முன்மொழிவு : 1。ஆண்டுதோறும், அக்டோர் நடுப்பகுதி முதல், நவம்பர் முற்பகுதி வரையான காலம், செந்தளிர்கள் கண்ணுக்கு விருந்து அளிப் பதற்கு மிகச் சிறந்த காலம் ஆகும். பொதுவாக, செந்தளிர்கள், சுமார் 1 திங்கள் காலம் நீடிக்கும்.
2.முதலில், பயணிகள் கிழக்கு வாயிலில் நுழைந்து, அடுத்து, நீல முகில் ஆலயம் --> சுன் யட் ஸன் நினைவாலயம் --> வைர அரியாசன பகோடா --> துயிலும் புத்தர் ஆலயம் --> செரி பள்ளத்தாக்கு ஆகிய காட்சி இடங்களுக்குச் செல்லலாம். பின்னர், பூங்காவின் வடக்கு வாயில் மூலம் வெளியேறலாம். இது, மிக சிறந்த பயண நெறியாகும்.