• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-06 23:22:27    
தாவோர் இன இடைநிலைப் பள்ளி

cri

சீனாவின் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில், தேசிய இனத்தின் பெயர் சூட்டப்பட்ட தன்னாட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை மூன்றாகும். அவை, வொலிதாவாதாவோர் தன்னாட்சி மாவட்டம், எவென்க் தன்னாட்சி மாவட்டம் மற்றும் எலுன்சு தன்னாட்சி மாவட்டம் ஆகும். இம்மூன்று தன்னாட்சி மாவட்டங்களிலும், சொந்த இனத்தின் பெயர் சூட்டப்பட்ட இடைநிலைப் பள்ளி உள்ளது. இனி, தாவோர் இன இடைநிலைப் பள்ளி பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். 1980ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்ட தாவோர் இன இடைநிலைப் பள்ளி, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சீனாவின் பல்வேறு நிலை அரசுகள் மற்றும் கல்வி துறைகளின் அரவணைப்பு மற்றும் தலைமையில், விரைவாக வளர்ந்து வருகிறது. அதன் இளை நிலை மாணவர்கள் மேல் நிலை பள்ளியில் நுழையும் விகிதம், 2004ஆம் ஆண்டில் 51 விழுக்காடாக இருந்ததிலிருந்து 2005ஆம் ஆண்டில் 66 விழுக்காடாக அதிகரித்தது. கடந்த சில ஆண்டுகளில், இந்த இடைநிலைப் பள்ளியின் வளர்ச்சி மேலும் வேகமானது. சிறுபான்மை தேசிய இனப் பகுதியிலுள்ள புகழ்பெற்ற பள்ளியாக மாற, இப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பாடுபட்டு வருகின்றனர். இப்பள்ளியின் தலைவர் கூறியதாவது:

தாவோர் இன இடைநிலைப் பள்ளியில் 1743 மாணவர்கள் 32 வகுப்புகளில் கல்வி பயில்கின்றனர். 142 ஆசிரியர்கள் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றனர். 55 விழுக்காட்டு மாணவர்கள் தாவோர் இனத்தனர்கள். 10 விழுக்காட்டு மாணவர்கள் ஹான் இனத்திலிருந்து சேர்க்கப்பட்டனர். ஆசிரியர்கள் அனைவரும், தாவோர், எவென்க், மங்கோலியா ஆகிய சிறுபான்மை தேசிய இனத்தவர்கள் ஆவர் என்றார் அவர்.

குழந்தை பருவத்தில் ஹான் இன மொழியிலும் சொந்த இன மொழியிலும் பேசும் திறனை இந்த மாணவர்கள் கொண்டதால், மொழிப் படிப்பில், அவர்களின் மேம்பாடு வெளிப்படுகிறது. அந்நிய மொழிப் படிப்பில் அவர்களை மேலும் பெரும் முன்னேற்றம் அடையச் செய்யும் வகையில், இந்தப் பள்ளி பெய்ஜிங்கிலுள்ள மத்திய தேசிய இனப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு, ஆங்கில மொழிப் பயிற்சி பெற, தனது ஆசிரியர்களை அங்கே அனுப்பியது. மேலும், பெய்ஜிங் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பள்ளியை நடத்துவதன் மூலம், சிறுபான்மை தேசிய இனங்களுக்கு பட்டத்தாரி மாணவர்களை வளர்க்கும் பயிற்சித் தளமாக அது மாறியுள்ளது.

ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்து, இந்தப் பள்ளி நீண்டகால மற்றும் குறுகியகாலத் திட்டத்தைத் தீட்டியுள்ளது. 2006ஆம் ஆண்டு மே முதல் நாளுக்கு முன், இப்பள்ளியின் சீன மொழி, கணிதம் மற்றும் ஆங்கில மொழி கற்பிப்புக் குழுவின் தலைவர்கள், வயதுக்கு வந்தவர் கல்வி பற்றி கற்றறிய, ஷாங்காய் ச்சா பெய் இடைநிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். தவிர, மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் உளவியல் ரீதியான அறிவூட்ட, உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில் அனுபவமிக்க உளவியல் பேராசிரியர் மெங் லியாங்க்கு தாவோர் இன இடைநிலைப் பள்ளி அழைப்பு விடுத்தது. மேலும், கல்வி மீதான மாணவர்களின் உற்சாகத்தைத் தட்டியெழுப்புவதில், இந்தப் பள்ளி பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது. இப்பள்ளியின் தலைவர் கூறியதாவது:தாவோர் இனத்தின் நாட்டுப்புறக் கதைகளையும், வூ சுன் எனப்படும் கதை பாடல் கலையையும் திருத்தி, பாட நூலில் சேர்த்து, மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க தயாராக இருக்கின்றோம். சொந்த ஊர் மீதான பாசம் மற்றும் நாட்டுப்பற்று பற்றிய கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் வகையில், மொலிதாவாவின் புவியியல் என்ற பாட நூலை வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம். அத்துடன், ஒவ்வொரு கல்விக் காலத்திலும் பெற்றோருக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தவும் தயாராக இருக்கின்றோம். சிறப்பு ஆசிரியர்கள் அவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்றார் அவர்.

பண்பாட்டு விழாவை நடத்துவதன் மூலம், இந்தப் பள்ளி தனது மாணவர்களுக்கு தாவோர் இன ஆடலைக் கற்றுக் கொடுக்கிறது. தாவோர் இன மொழி சொற்பொழிவுப் போட்டி, நாடக வாசிப்பு உள்ளிட்ட நிகழச்சிகளை நடத்துவன் மூலம் மாணவர்களின் திறனை வெளிப்படுத்துகிறது.

சீனாவின் ஹாக்கி விளையாட்டை தாவோர் இனம் உண்டாக்கி, வளர்க்கிறது. மொலிதாவா மாவட்டம், சீனாவின் ஹாக்கி ஊர் என கூறலாம். ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி, இப்பள்ளியின் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்வது இயல்பே. இது பற்றி குறிப்பிடுகையில், "குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பது முதல்" என்று இப்பள்ளியின் தலைவர் சீனச் சீர்திருத்தத்தின் தந்தை என புகழ்ந்து அழைக்கப்பட்ட தெங் சியௌ பிங்கின் காணிக்கை வாசகத்தை மேற்கோள் காட்டிக் கூறினார்.

முழு மாவட்டத்திலிருந்து பார்த்தால், துவக்கப் பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் ஹாக்கி அணிகள் இருக்கின்றன. எமது இடைநிலைப் பள்ளியில் சிறப்பு அணியும், சிறப்புப் பயிற்சியாளரும் இருக்கின்றனர். ஹாக்கி அணியைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளியில் உணவு உண்டு, வாழ்கின்றனர். நாள் தோறும் காலையில் அவர்கள் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கின்றனர். மாலையில் 7 மற்றும் 8வது வகுப்பில் தொழில் நுட்பப் பயிற்சியைப் பெறுகின்றனர்.

30க்கும் அதிகமான மாணவர்கள் இந்தப் பயிற்சிகளின் மூலம் ஹாக்கி தொழில் நுட்பத்தில் மட்டுமல்ல, அன்றாடச் செயல்பாட்டிலும் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். பள்ளிகளுக்கிடையிலான போட்டியில் அவர்கள் கலந்து கொள்கின்றனர். அதே வேளை, ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஆவ்பௌ எனப்படும் தேசிய இன விழாவில் செய்கைப் போட்டியில் கலந்து கொள்ளும் கடமையையும் ஏற்றுள்ளனர்.

தாவோர் இன இடைநிலைப் பள்ளி, மொலிதாவாதாவோர் இனத் தன்னாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அது சேர்க்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் சுற்றுப்புறத்திலுள்ள கிராமங்களிலிருந்து வருகின்றனர். குடும்பப் பொருளாதார நிலையினால், அவர்களுக்கு உதவித் தொகை தேவைப்படுகிறது. தேசிய இனக் கொள்கையை நிறைவேற்ற, மாவட்ட அரசாங்கம், சீன அரசு கல்வி அமைச்சகத்தின் விதிகளின்படி, கிராமப்புறத்துக்கான 9 ஆண்டுக்கால கட்டாயக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இது பற்றி இப்பள்ளியின் தலைவர் கூறியதாவது:

கிராமப்புறத்துக்கான 9 ஆண்டுக்காலக் கட்டாயக் கல்வி என்ற உறுதியளிப்பு முறைமையை அரசு நடைமுறைப்படுத்திய பின், கல்விக் கட்டணம் அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளது அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இலவச பாட நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சில பாட நூல்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். ஏனையவை இலவசமானவை. இதனால், ஏழைக் குடும்பங்களிலிருந்து வந்த மாணவர்கள் நல்ல சூழ்நிலையில் கல்வி கற்க முடியும். கல்விக் கட்டணம் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டாம். கடந்த சில ஆண்டுகளில், பொருளாதார இன்னலினால் பள்ளிப் படிப்பைத் தொடராமல் இருக்கும் நிலை ஏற்படவில்லை என்றார் அவர்.

கல்வித் தரத்தின் உயர்வு மற்றும் இளை நிலை மாணவர்கள் மேல் நிலை பள்ளியில் நுழையும் விகிதத்தின் அதிகரிப்புடன், தாவோர் இன இடைநிலைப் பள்ளியின் புகழ் விரிவாகி வருகிறது. இப்பள்ளியில் மேல் நிலை வகுப்புகளை உருவாக்கும் திட்டம், இம்மாவட்ட அரசாங்கத்தின் பணித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அண்மை எதிர்காலத்தில், தாவோர் இன இடைநிலைப் பள்ளி தாவோர் இன மக்களுக்கு மேலும் கூடுதலான திறமைசாலிகளை வளர்க்கும் என்று நம்புகின்றோம்.