• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-06 10:22:37    
வளர்ச்சிக்கான திட்டம் பற்றிய விளக்கம்

cri

செந்தில்........இந்த திட்டத்தின் நோக்கம் என்ன?

 
கலை........பத்து முதல் 15 ஆண்டுகால மூயற்சி மூலம் வட கிழக்கு பிரதேசத்தை உயர்வான பன்நோக்கு பொருளாதார வளர்ச்சி தரம் கொண்ட முக்கிய பொருளாதார அதிகரிப்பு பிரதேசமாக கட்டியமைப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
செந்தில்........இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக எவ்வகை செய்முறைகள் தேவை?
கலை.......ஒன்று வட கிழக்குப் பகுதியில் சர்வதேச போட்டியாற்றல் மிக்க தயாரிப்புத் தளத்தை நிறுவுவது, அரசு சார் புதிய ரக மூலப் பொருள் மற்றும் எரியாற்றல் உத்தரவாதத் தளத்தை நிறுவுவது, அரசின் முக்கிய வணிக தானியம் வேளாண் மற்றும் கால்நடை உற்பத்தித் தளத்தை நிறுவுவது, அரசின் முக்கிய தொழில் நுட்ப ஆய்வு மற்றும் வளர்ச்சிப் புத்தாக்கத் தளத்தையும் தேசிய உயிரின பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் முக்கிய காப்பீட்டு தளத்தையும் நிறுவுவது என்பன திட்டத்திற்கான செய்முறைகளில் உள்ளன.
செந்தில்.......இது குறித்து ஆய்வாளர் ச்சௌவின் கருத்து என்ன?
கலை.......இது பற்றி அவருடைய கருத்தை கேளுங்கள்.


பழைய தொழிற்துறைத் தளத்தின் தனிச்சிறப்பு, அதன் இயற்கையான வளம் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் வட கிழக்குப் பகுதியின் அடுத்த வளர்ச்சி திசையை தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் வட கிழக்கு பிரதேசத்தின் ஏற்கனவேயுள்ள வளர்ச்சி மேம்பாடு எடுத்துக்காட்டப்படும். மறுபுறம் வளர்ச்சி வழிமுறையும் இத்திட்டத்தில் கருத்தில் கொள்ளப்படுகின்றது.
செந்தில்.......மூன்று வட கிழக்கு மாநிலங்களும் இந்த திட்டத்திலிருந்து நன்மை பெறும். சீனாவின் உள்மங்கோலியா வட கிழக்கில் அமைந்துள்ளது என்று தமிழ் ஒலிபரப்பில் கேட்டதன் மூலம் அறிந்தேன். இது உண்மைதானே.
கலை........உண்மை. லியோநின், ஜீலின், ஹெலுங்சியான் ஆகிய மூன்று மாநிலங்களை தவிர, அவற்றை ஒட்டியுள்ள 5 உள்மங்கோலிய நகர நிலை நிர்வாக பகுதிகள் இந்த வளர்ச்சித் திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன. அதன் நிலபரப்பு 14 லட்சத்து 50 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். மக்கள் தொகை ஏறக்குறைய 12 கோடியாகும்.


செந்தில்.........அப்படியிருந்தால் உள்மங்கோலியா வட கிழக்கு மூன்று மாநிலங்களுடன் நெருங்கிய பொருளாதார தொடர்பையும் பரஸ்பரம் நிறைவு செய்யும் தன்மையும் கொண்டுள்ளது. இந்த திட்டம் மூன்று மாநிலங்களிலும் உள்மங்கோலியாவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டால் நியாயமான மூல வள விநியோகம் மற்றும் உற்பத்தி புழக்க நிலை முன்னேற்றப்படும். நான் நினைப்பது சரிதானே.
கலை.......நூற்றுக்கு நூற சரிதான். இத்திட்டம் பற்றி ஆய்வாளர் ச்சௌ உயர்வாக மதிப்பீடு செய்தார். அவர் சொல்வதை கேளுங்கள்.
முந்திய கொள்கையை விட நடப்புத் திட்டம் திசையில் மட்டுமல்ல முழுமையான வளர்ச்சிக்கான் நெறியையும் காட்டியுள்ளது. இகு பழைய தொழிற் தளத்தின் சீர்திருத்தத்தை முன்னேற்றும் ஆவணமாகும். ஆகவே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் ச்சௌ.


செந்தில்.......கலை இன்றைய நிகழ்ச்சியில் பங்கு கொள்வதன் மூலம் சீனாவின் வட கிழக்கு பகுதியை பொருளாதார அதிகரிப்பு பிரதேசமாக அமைப்பது பற்றி தெளிவாக அறிந்து கொண்டுள்ளேன். எதிர்காலத்தில் நேயர்கள் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதை தொடர்ந்து பின்பற்றி அடிக்கடி நிகழ்ச்சி உருவாக்குவது நல்ல வழிமுறையாகும். எனக்கு இந்த வாய்ப்பு தந்தற்கு மிக்க நன்றி.
கலை.......உங்கள் பாராட்டுக்கள் எங்கள் பணியை மேலும் செவ்வனே செய்வதற்கான ஊக்க ஆற்றலாகும். சிறந்த முறையில் நேயர்களுக்குச் சேவை புரிவதே எங்கள் நோக்கம். சரி செந்தில் இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதற்கு மிக்க நன்றி. வணக்கம்.