• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-07 10:22:28    
அமெரிக்க டென்னிஸ் போட்டி

cri

கிராண்ட் ஸ்லாம் எனப்படும் பெரும் பரிசுத்தொகை கொண்ட போட்டிகளில் ஒன்றான அமெரிக்க டென்னிஸ் வெளிப்படை போட்டியின் 8வது நாள் பந்தயங்கள் முடிவடைந்தன.

ஆடவர் ஒற்றையர் பிரிவில், கடந்த 2 சுற்று போட்டியில் சிறப்புடன் விளையாடிய தென் கொரிய வீரர் Lihengzeவை, பிரபல ரஷிய முதன்மை வீரர் Davydenko, 3-0 என்ற ஆட்ட கணக்கில் எளிதாக தோற்கடித்தார். அவர் காலிறுதி போட்டியில் நுழைந்துள்ளார். ஆசிய முதன்மை வீரர் Lihengzeவின் கனவு, இதனால் நிறைவேறாமல் போனது.

மற்றொரு பந்தயத்தில், ஜெர்மனியின் வீரர் ஹாஸ், 3 மணி நேர தீவிர போட்டியில், அமெரிக்க வீரர் Blakeகை, 3-2 என்ற ஆட்ட கணக்கில் வென்றார். இப்பந்தயத்தில் ஹாஸ் 18 ace எனும் தொடமுடியா பந்துகளை விளாசினார்.
செக் வீரர் Berdych காயமுற்று, போட்டியிலிருந்து விலகியதால், அமெரிக்க வீரர் Roddick அடுத்த சுற்றில் நுழைந்தார். கால் இறுதி ஆட்டத்தில், அவர் Federerஉடன் விளையாடுவார். Federer காலிறுதிக்கு தகுதிபெறும் ஆட்டத்தில், ஸ்பெயினின் வீரர் Lopez ஸை 3-1 என்ற ஆட்ட கணக்கில் வென்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில், Serena Williams, Venus Williams, Henin முதலிய பிரபல வீராங்கனைகள், தத்தம் எதிராளிகளை தோற்கடித்து, கால் இறுதி ஆட்டத்தில் நுழைந்தனர்.

அடுத்த சுற்றில் ஒரு மிக முக்கிய பந்தயம் உண்டு. 2006ம் ஆண்டு அமெரிக்க டென்னிஸ் போட்டியின் வெள்ளி பதக்கத்தை பெற்றவரும், பெல்ஜிய வீராங்கனையுமான Henin, அமெரிக்க வீராங்கனை Serena Williamsஸுடன் மோதுவார்.
இப்போட்டியின் பல சுற்றுகள் மற்றும் பல கட்டங்களில் பங்கேற்ற சீன வீராங்கனைகள் கடும் போட்டிக்கு பின் விலக்கப்பட்டனர். எஞ்சிய சீன வீராங்கனை Yanzi, தன் அணி தோழர் Knowlesஸுடன் கலப்பு இரட்டையர் அரை இறுதி போட்டியில் நுழைந்தார்.