வெளிநாடுகளில் சீனாவின் முதலீடு
cri
சீனா, வெளிநாடுகளுக்கு முதலீடு செய்யும் அளவைத் தொடர்ந்து விரிவாக்கி, முதலீட்டுத் தரத்தை உயர்த்தும் என்று சீனத் துணை வணிக அமைச்சர் Wei Jian Guo கூறியுள்ளார். இன்று Xia Men நகரில் கருத்தரங்கு ஒன்றில் உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு கூறினார். சீனா, வெளிநாடுகளுக்கு முதலீடு செய்யும் துறைகள் தொடர்ந்து விரிவாகி வருகின்றன. துவக்க காலத்தில், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, உணவுத்துறை ஆகிய துறைகளில் முக்கியமாக முதலீடு செய்யப்பட்டது. தற்போது, பதனீட்டு உற்பத்தி, மூலவளப் பயன்பாடு, உடன்படிக்கை மூலம் திட்டப்பணிக்குப் பொறுப்பேற்பது, வேளாண்மை ஒத்துழைப்பு, ஆய்வு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் முதலீடும் செய்யப்பட்டுள்ளது. இது வரை, நாடு கடந்த முதலீடு மற்றும் அலுவலில் ஈடுபடும் பல்வகை தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று Wei Jian Guo கறினார். அடுத்தக் கட்டத்தில், வெளிநாடுகளுக்கு முதலீடு செய்யும் அளவை வணிக அமைச்சகம் மேலும் விரிவாக்கி, பெருநிலப்பகுதியின் தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அளவையும் நிலையையும் உயர்த்த முயற்சி மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
|
|