• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-10 11:28:07    
தைவானில் Shanxi மாநிலத்தின் அரங்கேற்றங்கள்

cri

கடந்த சில ஆண்டுகளாக, சீனப் பெருநிலப் பகுதியின் Shanxi மாநிலத்துக்கும் தைவானுக்கும் இடையிலான பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கைகள் மென்மேலும் அதிகரித்து வருகின்றன. அண்மையில், Shanxi மாநிலத்தின் நடையுடை பாவனை நிறைந்த இரு நாடகங்கள் தைவானில் அரங்கேற்றப்பட்டன. மக்கள் இந்த அரங்கேற்றங்களை ஆரவாரமாக வரவேற்றனர். தைவான் Dongsen, Zhongshi உள்ளிட்ட தொலைக்காட்சி நிலையங்களும், பல செய்தியேடுகளும், AFP உள்ளிட்ட 10 வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களும், இந்த அரங்கேற்றங்களை சிறப்பாக அறிவித்தன.

படைப்புகளில் சிறந்த Shanxi மாநிலத்தின் பாரம்பரிய பண்பாடுகளால் தைவான் மக்கள் மனமுருகியுள்ளனர். சீனத் தேசத்தின் பாரம்பரியப் பண்பாடுகளில் உள்ளார்ந்த தலைசிறந்த அம்சங்கள், ரசிகர்களின் பேரார்வத்தைப் பெரிதும் தூண்டியுள்ளன. இதுதான், சீனத் தேசத்தின் சிறந்த பண்பாடு என்று Shanxi மாநிலப் பண்பாட்டுத் துறையின் துணைத் தலைவர் Doumingsheng அம்மையார் கருதுகிறார்.


அரங்கேற்றத்தைப் பார்த்தல், Shanxi மாநிலத்தின் பண்பாடு மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்தவையாகும். மக்கள் இதைப் பெரிதும் விரும்புகின்றனர். எதிர்காலத்தில், இயன்ற அளவில் இரு கரைகளின் பண்பாட்டுப் பரிமாற்றங்கத்தை வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இரு கரைகளின் மக்கள் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக தொடர்புகொள்ள வேண்டும் என்று சீன கோ மின் தாங் கட்சியின் துணைத் தலைவர் Jiangbingkun அரங்கேற்றங்களைக் கண்டுகளித்த பின் கலைக் குழுவினர்களிடம் கூறினார்.

Shanxi மாநிலம், சீன வட பகுதியின் மஞ்சள் பீடபூமி மற்றும் மஞ்சள் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இம்மாநிலம் சீனத் தேசத்தின் முற்கால நாகரீகத்தின் முக்கிய தோற்றுவாய்களில் ஒன்றாகும்.

Shanxi மாநிலம் தொல் பொருள் மாநிலமாக புகழ் பெறுகிறது. 10ம் நூற்றாண்டு முதல் இன்று வரை விட்டுச் செல்லப்பட்ட தொல் பொருள் கட்டிடங்கள், நாடாயளவில் 70 விழுக்காட்டை வகிக்கின்றன. Shanxi மாநிலத்தில் நாட்டுப்புறக் கலைகள் நிறைந்து காணப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள், உள்ளுர் இசை நாடகங்கள், காகிதக் கத்தரிப்பு, சித்திரத் தையல் வேலை முதலிய நாட்டுப்புறக் கலைகள் உலகில் புகழ் பெற்றுள்ளன. தவிரவும், Shanxi மாநிலத்தில் ஆழ்ந்த செல்வாக்குடைய வணிகப் பண்பாடுகள் பரவியுள்ளது. 17-19ம் நூற்றாண்டில் Shanxi வணிகர்கள் சீனப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்தனர். Pingyao என்றும் பண்டைய நகரம், Shanxi வணிகர்களின் முக்கிய இருப்பிடங்களில் ஒன்றாகும். இந்நகரம் 1997ம் ஆண்டு உலக பண்பாட்டு மரபுச் செல்வத்தின் பெயர்ப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டது.