சீனா, அன்னிய முதலீட்டை உட்புகுத்துவதில் முக்கிய துறையாக சேவைத்துறை படிப்படியாக மாறியுள்ளது. தென் சீனாவின் Xia Men நகரில் நடைபெற்ற 11வது சீனச் சர்வதேச முதலீட்டு வர்த்தக பேச்சுவார்த்தையில் கிடைத்த இத்தகவலை எமது செய்தியாளர் இன்று அறிவித்தார். இப்பேச்சுவார்த்தையின் சர்வதேச முதலீட்டுக் கருத்தரங்கில், சீனத் துணைத் தலைமையமைச்சர் வூ யி அம்மையார், அன்னிய முதலீட்டாளர்களுக்கு சில யோசனைகளை முன்வைத்தார். "நவீன சேவைத் துறை ஒத்துழைப்பு", சீனாவில் முதன்மை வணிக வாய்ப்பாகும் என்று அவர் கூறினார். தயாரிப்புத் தொழிலின் வளர்ச்சி ஓரளவு தணிவடைந்து, சீராக இருக்கின்றது. சேவைத்துறை தொடர்ந்து வளர்ந்து வருகின்றது. நாடு கடந்த கொள்வனவு அதிகரித்துள்ளது. சேவை துறையில் வணிக முறைவழியாக்க வெளியூற்றுச் சேவை பெருமளவில் வளர்ந்துள்ளது. இவை, சீனா, அன்னிய முதலீட்டைப் பயன்படுத்தும் புதிய தனித்தன்மையாகும் என்று வணிக அமைச்சகத்தின் அதிகாரி கருதுகின்றார். புள்ளி விபரங்களின் படி, இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் சேவைத்துறை உட்புகுத்திய அன்னிய முதலீட்டுத் தொகை, 1380 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 58 விழுக்காடு அதிகரித்துள்ளது.
|