• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-11 11:46:31    
கத்தரிக்காய் வறுவல் கிடைப்பது

cri

வாணி – பொதுவாக கூறின், கத்தரிக்காய் சமைப்பதற்கு எளிதானது. ஆனால், சுவையான கத்தரிக்காய் வறுவல் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். இன்று நாம் தயாரிக்கும் இந்த உணவு வகையில் ஸ்ச்சுவான் மாநிலத்தின் தனிச்சிறப்புடைய மிளகாய் பயன்படுத்துவோம்.

க்ளீட்டஸ் – அப்படியா, வாணி, நீங்கள் தேவையான பொருட்கள் என்னவென்று கூறுங்கள்.

வாணி – சரி. கேளுங்கள்

நீளமான கத்தரிக்காய் 2
சிவப்பு மிளகாய் 2
பூண்டு 2
சோயா சாஸ் 30 மில்லி லிட்டர்
கொத்த மல்லி 5 கிராம்
இஞ்சி 5 கிராம்

வாணி – வறுவல் தயாரிப்பதற்கு முன், சிவப்பு மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைத் தனித்தனியாக சிறிய அளவாக நறுக்க வேண்டும்.
க்ளீட்டஸ் – கத்தரிக்காய்களைச் சுத்தம் செய்து, இதன் காம்புப் பகுதியை நீக்க வேண்டும. பிறகு, இவற்றை 10 சென்டி மீட்டர் நீளம், 1 சென்டி மீட்டர் அகலமுடைய அளவுத் துண்டுகளாக நறுக்கவும்.

வாணி – கத்தரிக்காய் துண்டுகளைத் தட்டில் வைத்து, அதை ஆவிப்பாத்திரத்தில் மிதமான சூட்டில் வேகவைக்க வேண்டும். சுமார் 8 நிமிடங்கள் தேவை.
மிளகாய். பூண்டு, சோயா சாஸ், இஞ்சி ஆகியவற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்து, கொஞ்சம் தண்ணீரை ஊற்றி, நன்றாக கலக்கவும். இது தான் இன்றைய மசாலா சாஸ்.

க்ளீட்டஸ் -- வேக வைக்கப்பட்ட கத்தரிக்காய் துண்டுகளை ஆவிப்பாத்திரத்திலிருந்து எடுக்கலாம். இதன் மீது முன்பு தயாரித்த இந்த மசாலா சாஸை ஊற்றலாம்.
வாணி – இறுதியில், கொத்த மல்லியை வறுவலில் வைக்கலாம். சரி. நேயர்களே. இன்றைய கத்தரிக்காய் வறுவல் தயார். 

க்ளீட்டஸ் – வாணி, இன்றைய வறுவல் தயாரிப்பு மிகவும் எளிதானது.

வாணி –ஆமாம், இந்த வறுவலுக்கு இரண்டு குறிப்புகள். ஒன்று, கத்தரிக்காய் துண்டுகளை நன்றாக வேகவைக்க வேண்டும். இரண்டு, மசாலா சாஸ் மிக முக்கியமானது. நாங்கள் வீட்டில் தயாரிக்கும் போது, ச்சிசுவான் மாநிலத்தின் தனிச்சிறப்புடைய மிளகாய் தயாரிப்பைப் பயன்படுத்துகின்றோம். நேயர்களே, தமிழகத்தில் இது கிடைப்பது கஷ்டம் தான். ஆனால், பரவாயில்லை, தமிழ் தனிச்சிறப்புடைய மிளகாயை பயன்படுத்தி, நீங்கள் முயற்சி செய்யலாம்.

க்ளீட்டஸ் – அடுத்த வாரம், எந்த வறுவல்?

வாணி – அடுத்த வாரம், ஒரு வகை மீன் வறுவல் தயாரிப்போம். ஆர்வம் கொண்ட நேயர்கள், crucian மீன், உப்பு, சோயா சாஸ், சமையல் மது, புளிக் காடி முதலியவற்றை முன் கூட்டியே தயாரிக்கலாம்.