• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-12 16:30:42    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழு

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் புதிய வீடு

29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழு, சுருக்கமாகக் கூறினால், பெய்ஜிங் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு, 2001ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13ஆம் நாள் நிறுவப்பட்டது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பல்வேறு ஏற்பாட்டுப் பணிகளுக்கு அது பொறுப்பேற்கிறது. இக்குழிவின் கீழ், செயலக நிர்வாகப் பிரிவு, சர்வதேசத் தொடர்புப் பிரிவு, விளையாட்டுப் போட்டிப் பிரிவு, செய்தி பிரச்சாரப் பிரிவு, ஒலிம்பிக் தீபத் தொடர் ஓட்ட மையம், பதிவு மையம், நுழைவுச்சீட்டு மையம் உள்ளிட்ட 24 பிரிவுகள் உள்ளன. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுப் பணிகள் பன்முகங்களிலும் நடைமுறைக்கு வருவதோடு, தனது அமைப்பு முறையையும் பெய்ஜிங் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு படிப்படியாக விரிவாக்கும். 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கும் போது, இக்குழுவின் கீழுள்ள பிரிவுகளின் எண்ணிக்கை 30க்கு மேல் அதிகரிக்கும்.

அனைவருக்கும் தெரிந்தவாறு, விளையாட்டுப் போட்டிகள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மைய அம்சமாகும். சேவை மற்றும் உத்தரவாதப் பணிகள் அனைத்தும், விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி நிரலைச் சார்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சிறிய நிகழ்ச்சி நிரலில், பெய்ஜிங் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் விளையாட்டுப் போட்டிப் பிரிவைச் சேர்ந்த 100க்கும் அதிகமான பணியாளர்களின் சளையாத முயற்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரிவின் துணைத் தலைவர் லியூ வென் பின், இந்நிகழ்ச்சி நிரலின் உருவாக்கம் பற்றி கூறியதாவது—

"முதலில், விளையாட்டு வீரர்கள் மிகச்சிறந்த சாதனையைப் பெறுவதற்கு உறுதியளிக்க வழி செய்ய வேண்டும். மேலும், பல்வேறு சர்வதேச விளையாட்டுச் சம்மேளனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும். தவிரவும், தொலைக்காட்சி ஒளிபரப்பு. முதலில், நாள்தோறும் நடைபெறும் போட்டிகளின் நிகழ்ச்சி நிரலை உருவாக்குகின்றோம். இரண்டாவதாக, பகுதிப் பகுதியாக தனியொரு விளையாட்டுப் போட்டிக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க வேண்டும். இதற்குப் பின், மேலும் திட்டவட்டமான நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்படலாம். இந்தப் போக்கு மிகவும் கடினமானதாகும்" என்றார் அவர்.

பணிகள் அதிகரித்து வருவதோடு, விளையாட்டுப் போட்டிப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்களும் அதிகரித்து வருகின்றனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, 10000 தொண்டர்களை இப்பிரிவு சேர்க்கும்.

விளையாட்டுப் போட்டிப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள்

பொருள் புழக்கப் பிரிவு, பெய்ஜிங் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் பொது பின்னணிச் சேவைப் பிரிவாகும் என்று கூறப்படலாம். இதர பிரிவுகளுக்கு சேவை வழங்கும் பணிக்கு அது பொறுப்பேற்கிறது. பெருமளவிலான பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தேவையான பொருட்களின் மொத்த அளவு மிகவும் பெரியது. இந்தப் பொருட்களின் வகைகளும் மிகவும் சிக்கலானவை. இந்தப் பொருட்களுக்கான கொள்வனவு, சேமிப்பு, வினியோகம், கட்டுப்பாடு, மறு சுழற்சி, தீர்வு முறை ஆகியவை, பொருள் புழக்கப் பிரிவின் பொறுப்பாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முந்தைய பொருள் சேமிப்பு மற்றும் வினியோகப் பணி ஓரளவு சிக்கலானது. விளையாட்டுப் போட்டி துவங்கிய பின், பொருள் புழக்கப் பிரிவின் மேலும் அதிகமான பணிகள் இன்றியமையாதவை.

நுட்பமான அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நேர்த்தியைத் தேடுவது என்பது, பல்வேறு பிரிவுகளுக்கான கோரிக்கையாகும். 16000 விளையாட்டு வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வசிப்பிடம், வாழ்க்கை, பொழுது போக்கு முதலிய சேவைகளை வழங்கும் ஒலிம்பிக் கிராமத்தின் வடிவமைப்பில் நழுவ விட்ட நுண்ணிய விடயங்கள் ஒன்றும் இல்லை.

பெய்ஜிங் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுப் பணிகளுக்குப் பொறுப்பேற்கும் அதே வேளை, பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுப் பணிகளுக்கும் பொறுப்பேற்பது என்பது, ஒலிம்பிக் அமைப்பு வரலாற்றில் முதல்முறையாகும். இக்குழுவைச் சேர்ந்த பாராலிம்பிக் பிரிவு, பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுப் பணிகளுக்கு நேரடியாக பொறுப்பேற்கிறது. அத்துடன், தொடர்புடைய பிரிவுகளின் பணிகளையும் அது ஒருங்கிணைக்கும். இப்பிரிவைச் சேர்ந்த பணியாளர்களின் பணிகளில், கடினமான சுமை தவிர, மனதைத் தொடும் அனுபவங்களும் புரிந்துணர்வும் மேலும் அதிகமாக காணப்படாலம்.