• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-12 16:28:45    
சண்டைக்கோழி

cri

முன்பொரு காலத்தில் ஜு ஷெங்சு என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் அரசருக்காக சண்டைக்கோழிகளை வளர்ப்பவர் ஆவார். ஒரு முறை அரசர் ஜு ஷெங்சுவை அழைத்து, என்ன சண்டைக்கோழி தயாரா என்று கேட்டார். அதற்கு ஜி ஷெங்சு, இல்லை அரசே, அந்த சேவல் இன்னும் மூர்க்கத்தனத்துடன் இருக்கிறது. கொண்டையை சிலிர்த்து பொறுமுகிறது என்று கூறினார்.

பத்து நாட்கள் கழித்து மீண்டும் ஜு ஷெங்சுவை அழைத்த அரசர், சண்டைக்கோழி தயாரா என்று கேட்டார். ஜு செங்சு, இல்லை அரசே, சின்ன சத்தம் கேட்டாலும், நிழலைக் கண்டாலும் கூட கட்டுக்கடங்காமல் துள்ளிகுதிக்கிறது, மூர்க்கத்தனம் குறையவில்லை என்றான்.

மேலும் 10 நாட்கள் கழிந்தது. மீண்டும் அரசர் ஜு ஷெங்சுவை அழைத்து அதே கேள்வியை கேட்டார். இல்லை மன்னா, இன்னும் அதன் கோபம் குரையவில்ல்லை. யாரை பார்த்தாலும் கோபத்துடன் முறைக்கிறது, ஆணவத்துடன் நடந்துகொள்கிறது என்றார்.

மேலும் 10 நாட்கள் கழிந்தது, அரசர் ஜு ஷெங்சுவை அஐத்து எபோதும் போல, சண்டைக்கோழி தயாரா என்று கேட்டார்.

ஜு ஷெங்சுவும் அரசே, ஏறக்குறைய தயாராகிவிட்டது. மற்ற சேவல்கள் குரலெழுப்பினாலும் இது வாய் திறப்பதில்லை, பெரிதும் அலட்டிக்கொள்வதில்லை.

பார்ப்பதற்கு மரத்தாலான சேவல் போல இருந்தாலும், எந்தச் சண்டையையும் வெல்வதற்கு திரன்கொண்டதாய் உள்ளது. எந்த சேவலும் இதனுடன் மோத பயப்படுகின்றன. அனைத்தும் இதைக் கண்டாலே திரும்பி ஓடுகின்றன என்றார்.

எதையும் கொஞ்சம் பண்பட்டு, ஆற அமரச் செய்தால், நுட்பம் அறிந்து, திறமையுடன் கையாளமுடியும்.