• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-11 13:02:21    
அமெரிக்க ஆல்ப‌ர்ட் தெரிவித்த வாழ்த்துச் செய்தி

cri

இன்று 45வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சீனத் தமிழ் வானொலிக்கு அமெரிக்க சீனத் தமிழ் வானொலி மன்றத்தின் சார்பிலும் என் சார்பிலும் வாழ்த்துக்களை முன் வைப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன். உலகில் வானொலிகள் இல்லாத நாடுகள் இல்லை! அந்தந்த நாட்டு வானொலிகள் அந்தந்த மொழியில்! எந்த நாடாயினும் இதற்கு விதிவிலக்கல்ல! சீனா தவிர! உலக மக்களுடன் பழகுவோம் என்ற சீரிய‌ சித்தாந்தத்தில் துவங்கி இன்றைக்கு சரித்திரம் படைத்து 44 ஆண்டுகள் வெற்றிநடைபோட்டு 45வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பது மிகப்பெரிய சாதனை!
அதனினும் அரிய சாதனை தமிழ் மொழியைத் தஞ்சைத் தரணியில் பயின்று இன்றைக்குச் சரளமாக பேசும் சீன வானொலி தமிழ்ப் பிரிவுத் தலைவர் திருமதி.கலையரசி அவர்களும் சீன வானொலியில் சிறகுவிரித்திருக்கும் மற்ற சக பணியாளர்களும் தமிழ் பயின்று த‌மிழ் பேசுவ‌து!


கொஞ்சம் தமிழ் பேசினாலும் கொஞ்சும் தமிழில் பேசி எங்கள் வெல்லத் தமிழ் மொழியில் எங்கள் உள்ளம் வெல்ல வலம் வருகிற‌ சீனத் தமிழ் வானொலிப் பணியாள‌ர்க‌ள் த‌ங்க‌ள் பெய‌ர்க‌ளையே த‌மிழ்ப்பெய‌ர்க‌ளாக‌ மாற்றிக்கொண்டு உலா வ‌ருவ‌து என் போன்ற‌ நேய‌ர்க‌ளுக்கு ஒரு குடும்ப‌ உண‌ர்வினை ஏற்ப‌டுத்தியிருப்ப‌தே இந்த‌ மாபெரும் சாத‌னை மைல் க‌ல்லை எட்டியுள்ள‌து என்பேன்! கண்ணுக்கு இமை எப்படி முக்கியமோ அப்படித்தான் வானொலிக்கும்நேயருக்குமான உறவு ஒன்றோடு
ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது!
இந்த உறவு தொடரும்!வளரும்! வாழும்!
க்ளீட்டஸ்: இன்றைய நிகழ்ச்சியின் முதல் கடிதம், பகளாயூர் பி. ஏ. நாச்சிமுத்து எழுதியது. சீனாவின் மொத்த மக்கள் தொகையில் கிராம விவசாயிகள் 90 கோடி பேர் உள்ளனர் என்பதை செய்தித் தொகுப்பின் மூலம் அறிந்துகொண்டேன். சீன அரசு இவர்களுக்கும் ஓய்வூதிய திட்டம் வகுத்து அவர்கள் பயன் பெற வாய்ப்பளித்துள்ளது. ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயிகளே என்பதை சீனத் தலைவர்கள் தெரிந்துகொண்டு, பயனுள்ள வகையில் செயல்படுவதை பாராட்டுகிறேன் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து நீலகிரி, கீழ்குந்தா நேயர் கே. கே. போஜன் எழுதிய கடிதம். சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் பெய்சிங்கிலுள்ள மகாமணி ஆலயம் பற்றி தெளிவாக கூறியதைக் கேட்டேன். எந்த் அஒரு கோயிலிலும் மணி என்பது கண்டிப்பாக இருக்கும். சில சிறிய அளவிலும், சில பெரிய அளவிலும் இருக்கின்றன. ஆனால் இந்த மகாமணி ஆலையத்தின் மணியோசை 20 கி.மீ தொலைவில் உள்ளவர்களுக்கும் கேட்கும் என்றும் இதன் எடை 24.8 டன் என்றும் கேட்டோம். இந்த மணியை வார்த்தெடுத்தபோது மனித ரத்தமில்லாமல் வார்த்தெடுக்க முடியாத என்ற நிலையில் 18 வயது பெண் உயிர்பலி தந்து மணிக்கு ஊதா நிறத்தை எற்படுத்தியதையும் கேட்டோம். எந்த காலத்திலும் மனித உயிர் மலிவாகவே பயன்பட்டுள்ளது என்ற எண்ணம் தோன்றுகிறது.


கலை: அடுத்து மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி முனுகப்பட்டு நேயர் பி. கண்ணன் சேகர் எழுதிய கடிதம். சீனாவின் மிக உயரமான புத்தமதக் கோயில் கோபுரம் பற்றி மலர்ச்சோலை நிகழ்ச்சியில் கூறக் கேட்டேன். 153 மீட்டருக்கு அதிகமான நீளமுள்ள இந்தக் கோபுரம் 13 அடுக்குகளைக் கொண்டு சிறப்புற்றிருப்பதை அறிந்தேன். புதிதாக கட்டப்படுள்ள இந்த புத்த மதக் கோயில் கோபுரத்தின் திறப்பு விழாவிற்கு 108 குருமார்கள் கலந்து மறை ஓதினர் என்பது சிறப்புக்குரியது என்று எழுதியுள்ளார்.
அடுத்து மீனாட்சிப்பாளையம் கா. அருண் எழுதிய ஒலிம்பிக் போட்டி பற்றிய கடிதம். உலகெங்கிலுமிருந்து ஒலிம்பிக்கில் ஆர்வம் கொண்டவர் எவரும் தொண்டராக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள், போட்டியில் ஒரு விளையாட்டு வீரராக பங்கேற்க முடியாதவர்களுக்கு ஒலிம்பிக் ஈடுபாட்டை பூர்த்தி செய்ய இந்த வாய்ப்பு உதவும். வாய்ப்பளிக்கும் சீனாவுக்கு நன்றிகள் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து இலங்கை காத்தான்குடி எம். ஜே. எஃப். ரிஸ்லா எழுதிய கடிதம். தொடர்ந்து சீன வானொலியைக் கேட்டு வருகிறேன். வானொலி கேட்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சீன வானொலியின் மூலம் நல்ல பல் அதகவல்கள் பெற முடிகிறது. கட்டுரைகள், கவிதைகள் கூட எழுத முடிகிறது. இதனால் தான் என்னையும் நேயராக இணைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று எழுதியுள்ளார்.
கலை: அன்பு ரிஸ்லா, உங்கள் விருப்பப்படியே உங்களை நேயராக இணைத்துக்கொள்வதில் நாங்களும் மகிழ்கிறோம். சீன வானொலிக் குடும்பம் உங்களை அன்போடு வரவேற்கிறது.
அடுத்து சீன வானொலி நேயர் மன்றங்களின் கள ஆய்வு பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி குறித்து தார்வழி பி. முத்து எழுதிய கடிதம். நேயர் மன்றக் கள ஆய்வு தொடர்பாக நேயர் மன்றத் தலைவர்கள் என்ன செய்ய வேண்டும், அந்த கள ஆய்வு படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்யவேண்டும் என்பது பற்றி கேள்வி பதில் நிகழ்ச்சியில் அறிந்துகொள்ள முடிந்தது. கலையரசி அம்மையாரும், செல்வம் அவர்களும் நடத்திய உரையாடலுக்கு நன்றி என்று எழுதியுள்ளார்.


பெரிய காலாப்பட்டு வெ.சந்திரசேகரன்
பசும்பெட்டி திட்டத்தின் மூலம் சீனாவில் பழைய செல்லிட பேசியை மறுசுழற்சி செய்து வருவதை பற்றி வாணி அவர்கள் மிக விரிவாக கூறிய தகவல்களை கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அதே சமயத்தில் இதுபோன்ற நடவடிக்கை இன்றைய காலகட்டத்தில் நிச்சயம் தேவையே. இல்லை என்றால் சுற்றுப்புற சுழல் மாசுபாட்டை அதிகம் உண்டாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 'பசும்பெட்டி' திட்டத்தின் மூலம் பழைய செல்லிட பேசிக் கழிவை பயன்படுத்தும் முறையை மற்ற உலக நாடுகளும் பின்பற்றி உலகச் சுற்றுச் சூழலை பேணிக் காப்போம்.