• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-11 13:12:54    
பாலியல் அறிவு பரவல் செய்யும் சீன இளைஞர் இணையம்

cri

செல்வி வூ லீ பிங் என்பவரும் இந்த அமைப்பின் உறுப்பினர் ஆவார். கிழக்கு சீனாவின் செ ச்சியாங் மாநிலத்து தெ சின் மாவட்டத்தில் தொழில் பள்ளியில் அவள் பயில்கின்றார். பள்ளியில் பாலியல் மற்றும் இனப்பெருக்க நலவாழ்வு கல்வி பற்றிய கூட்டாளி கல்வி என்னும் குழுவை அவள் உருவாக்கினாள். ஒத்த வயதுடைய இளைஞர்களிடையே கருத்து பரிமாறுவது, தொடர்பு கொள்வது ஆகியவற்றின் மூலம், இந்த குழு சரியான பாலியல் அறிவுகளைப் பரவல் செய்கின்றது. அறிவு பின்னணி, ஆர்வம் கொண்ட ஒத்த வயது கூட்டாளி அல்லது நண்பர்களின் யோசனைகளையும் கருத்துக்களையும் கேட்க மக்கள் விரும்புகின்றனர் என்று மனயியல் ஆய்வின் முடிவு காட்டுவதாக வூ லி பங் கூறினார். குறிப்பாக சில நுண்ணுணர்ச்சி பிரச்சினைகள் பற்றி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இளைஞர்களுக்குப் புகட்டும் அறிவுரையின் தாக்கம், நண்பர்களிடமிருந்து வரும் கருத்துக்களை விட குறைவு. கூட்டாளி கல்வி, இந்த குறைவை நீக்க பயன்மிக்கது.

 
இந்தக் குழு உருவாக்கப்பட்ட துவக்கக் காலத்தில், வூ லி பிங் பல இன்னல்களைச் சந்தித்திருந்தார். பள்ளியில் முதன் முறையாக நடவடிக்கை மேற்கொண்ட போது, 3,4 பேர் மட்டும் வந்தனர். ஆனால், அவள் பெரும் முயற்சியுடன் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றாள்.
கடந்த 2 ஆண்டுகளில், துணிவு, ஆர்வம் ஆகியவற்றுடன், இந்தக் குழு பல பத்து உறுப்பினர்களை ஈர்த்துள்ளது. அதேவேளையில், இந்த நடவடிக்கை இதரப் பள்ளிகளிலும் பரவல் செய்யப்பட்டுள்ளது. வூ லி பிங்கின் சக மாணவி பாங் சான் கூறியதாவது,


தொடர்புடைய நடவடிக்கைகளில் கலந்து கொண்டேன். இவற்றின் மூலம், இளைஞர் காலம் மனிதரின் வாழ்க்கையில் குறிப்பாக பாலியல் மற்றும் இனப்பெருக்கத் துறையில் மிக முக்கியமான காலக்கட்டமாகும் என்பதை அறிந்து கொண்டேன் என்றார் அவள்.
சீன இளைஞர் இணையம், தொடர்புடைய அரசு வாரியங்களுடனும் சமூக அமைப்புகளுடனும் சீரான ஒத்துழைப்பு உறவை உருவாக்கி, சமூகத்திலிருந்து ஆதரவைப் பெற்றுள்ளது. அண்மையில் ஐ.நா மக்கள் தகை நிதியம் சீனாவுக்கு வாழங்கிய ஆதரவுத் திட்டப்பணியில், சீன இணைஞர் இணையத்தின் வளர்ச்சிக்கான ஆதரவு காணப்படுகின்றது. சீனாவிலுள்ள இந் நிதியத்தின் துணைப் பிரதிநிதி Mariam Khan அம்மையார் கூறியதாவது


இளைஞர்கள் அறிவு கூர்மை, உற்சாகம் ஆகியவற்றைக் கொண்டவர்களாவர். தமக்குத்தாமே உதவி செய்யும் ஆற்றலுடையவர்கள். குறிப்பாக, பாலியல் மற்றும் இனப்பெருக்கத் துறையில் அவர்களுக்கு இத்தகைய திறமை உண்டு என்றார் அவர்.
சீனாவின் மிகப் பெரியஅரசு சாரா குடும்ப நலத்திட்ட மற்றும் இன்ப்பெருக்க இயமக்கமான சீன குடும்ப நலத்திட்டச் சங்கம் சீன இளைஞர் இணையத்தின் பணிக்கு வழிகாட்டி ஆதரவு அளித்து, வழிக்காட்டி வருகின்றது. இதன் பொதுச் செயலாளர் லீ யேன் சுயு அம்மையார் கூறியதாவது,
இளைஞர்களின் பங்கு இருந்தால்தான், எமது திட்டப்பணி மேலும் அதிகமான இளைஞர்களின் தேவையை நிறைவு செய்ய முடியும் என்றார் அவர்.