• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-11 13:18:57    
தேயிலையின் தலைமுறையினரான தேயெள இனம்

cri

தென் மேற்குச் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் தேஹங் முதலிய இடங்களில் தலைமுறை தலைமுறையாக தேயிலை பயிரிடும் இனமான தேயெள இனம் வாழ்ந்து வருகிறது. இவ்வினம், உள்ளூரில் உள்ள குடி மக்களின் மிகவும் பண்டைய தேசிய இனங்களில் ஒன்றாகும். "தேயிலையின் தலைமுறையினர்" என தம்மை தாமே அவர்கள் அழைக்கின்றனர். தற்போது இவ்வினத்தின் மக்கள் தொகை, இருபதாயிரத்துக்குட்பட்டது.


வரலாற்று ஆவணத்திற்கிணங்க, கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் தேயெள இனத்தின் முன்னோடிகள், யுன்னான் மாநிலத்தின் தேஹங், லிங்சன் முதலிய இடங்களில் வசிக்கத் துவங்கினர். நவ சீனா நிறுவப்பட்ட போது, "பாங் லுன் இனம்" என, இது அழைக்கப்பட்டு வந்தது. 1985ம் ஆண்டு செப்டம்பர் திங்களில், இவ்வின மக்களின் விருப்பத்தின் படி, "தேயெள இனம்" என அதிகாரப்பூர்வமாக பெயர்மாற்றப்பட்டது. தேயெள இனத்தின் மரபுக்கதையில், தேயெள இன அரசி ஆளும் மன்னராட்சி இருந்தது. அங்கு அவர்களின் அரண்மனை கட்டியமைக்கப்பட்டது. இந்த பண்டைக்கால அரண்மனையை உறுதிப்படுத்தப்படுவதற்கு ஆதாரங்கள் கிடையாது. இருப்பினும், இந்த மரபுக்கதை தேயெள இன மக்களின் மனதில் ஆழப் பதிந்துள்ளது.


தேயெள இனம், தேயிலை சாகுபடிக்கும் தேனீர் அருந்துவதற்கும் மதிப்பு அளிக்கும் ஒரு இனமாகும். சொந்த இன எழுத்துக்கள் இல்லை என்றாலும், அவர்களின் ஒரு நீண்ட வாய்வழி காவியம் ஒன்றில் தேயிலை பற்றி குறிப்பிடப்பட்டது. பண்டைய உலகின் மேலே, தேயிலை மரம், அனைத்து பொருட்களின் முன்னோடி. அப்போது, பூமிமுழுதும் பாலைவனம். தேயிலை மரம், 102 தேயிலைகளை பூமியில் இறக்கியது. இந்த 102 தேயிலைகள், 51 ஆண் பெண் இணைகளாக மாறின. அவர்கள் மனித குலத்தின் முன்னோடிகள். தேயெள இனம், தேயிலையின் தலைமுறையாகும். எனவே, தேயெள இனம் இருக்கும் இடமெங்கும், மலைகளில் நிறைய தேயிலை மரங்கள் காணப்படுகின்றன.


தேயெள இனத்தவர்கள் நீண்டகாலமாக மலைப்பிரதேசங்களில் வாழ்கின்றனர். அங்கு காலநிலை வெப்பமாக உள்ளது. மழை அதிகமாக பெய்கின்றது. எனவே, தேயெள இன மக்களின் உணவுகளில் அடர்ந்த தேனீர் வழக்கமாகியுள்ளது. உள்ளூரில் வயது வந்த ஆண்களுக்கும் நடுத்தர முதிய பெண்களுக்கும் இந்த அடர்ந்த தேனீர் இன்றியமையாதது. இத்தகைய அடர்ந்த தேனீர் அருந்திய பின், வழக்கமாக இரவில் தூக்கம் வராது. ஆனால், தேயெள இன மக்கள் இதற்கு விதிவிலக்கு. உழைத்த பின் இதை அருந்தினால், எழுச்சி மிக்கவர்களாக இருப்பார்கள்.