இவ்வாண்டின் முதல் 8 திங்களில், சமூக நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை, 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட சுமார் 16 விழுக்காடு அதிகமாகும். சீனத் தேசிய புள்ளி விபரப் பணியகம் இன்று வெளியிட்ட புள்ளி விபரம் இதை காட்டுகின்றது. இவ்வாண்டு, சீனாவின் நுகர்வுச் சந்தை மேலும் சுறுசுறுப்பாக இருக்கின்றது. நுகர்வுத்தொகையின் அதிகரிப்பு வேகம் திங்களுக்கு திங்கள் விரைவாகி வருகிறது. புள்ளி விபரங்களின் படி, கடந்த ஆகஸ்ட் திங்கள், சீனச் சமூக நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை, 71 ஆயிரத்து 170 கோடி யுவானை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 17 விழுக்காட்டுக்கு மேல் அதிகமாகும். புள்ளி விபரங்களின் படி, ஆகஸ்ட் திங்கள், நகரங்களிலும் கிராமங்களிலும் நுகர்வு அடிப்படையில் சமநிலையில் வளர்ச்சியடைந்துள்ளது. நகரங்களில் நுகர்வு ஓரளவு உயர்ந்துள்ளது. உணவுத் துறையிலான நுகர்வு மிக வேகமாக அதிகரித்துள்ளது.
|