4 நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், கிராமங்களில் கட்டாயக் கல்விப் பணியை வலுப்படுத்தி, கல்வியின் நியாயத்தன்மையை சீன அரசு தூண்டியுள்ளது என்று சீனக் கல்வி அமைச்சர் Zhou Ji கூறியுள்ளார். சீனாவின் கிராமங்களில், கட்டாயக் கல்வி கட்டத்திலான மாணவர்களின் எண்ணிக்கை, 15 கோடியை எட்டியுள்ளது. இதற்காக, கடந்த சில ஆண்டுகளாக, மேற்கு பகுதியில் 9 ஆண்டுகால கட்டாயக் கல்வியின் பரவலையும், இளம் வயதினர் மற்றும் வயதுவந்தோரிடையே எழுத்தறிவின்மையை அடிப்படையில் ஒழித்தலையும் விரைவுபடுத்துவது, கட்டாயக் கல்வி கட்டத்தில் கல்வி கட்டணத்தை விலக்குவது, கிராமக் கட்டாயக் கல்வியை, நாட்டின் நிதி உத்தரவாத வரம்புக்குள் சேர்ப்பது ஆகிய நடவடிக்கைகள் சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், கிராமங்களில் கல்விப் பணி வலுப்பட்டுள்ளது. கல்வியின் நியாயத்தன்மை முன்னேற்றப்பட்டுள்ளது.
|