"2007 சீன திபெத் பண்பாட்டு வாரம்" என்ற நடவடிக்கை, நேற்று ரஷியாவின் மாஸ்கோவில் நிறைவடைந்து, கார்மேக் குடியரசின் தலைநகர் எலிஸ்தாவில் தொடர்ந்து நடைபெறும்.
சீனப் புத்த மத சங்கத்தைச் சேர்ந்த திபெத் கிளைத் தலைவர் சூகாங் துதான்கோச்சு, நேற்று பேசுகையில், இந்தத் திபெத் பண்பாட்டு வாரம் மூலம், கார்மேக் மக்கள், திபெத்தின் பண்பாடு, திபெத் மக்கள் மற்றும் வளர்ச்சியை அறிந்துகொள்வதற்குச் சன்னல் ஒன்றைத் திறந்து வைத்து, திபெத்துக்கும் கர்மேக்கிற்குமிடையில் பண்பாட்டு பரிமாற்றத்தையும் பொருளாதார ஒத்துழைப்பையும் விரைவுபடுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
2007 சீன திபெத் பண்பாட்டு வாரம், ரஷியாவில் சீன ஆண்டு என்ற நிகழ்ச்சியில் ஒரு முக்கிய பகுதியாகும். அது, சப்டெம்பர் 16ம் நாள் நிறைவடையும்.
|