"2007 சீன திபெத் பண்பாட்டு வாரம்" என்ற நடவடிக்கை, நேற்று ரஷியாவின் மாஸ்கோவில் நிறைவடைந்து, கார்மேக் குடியரசின் தலைநகர் எலிஸ்தாவில் தொடர்ந்து நடைபெறும்.
சீனப் புத்த மத சங்கத்தைச் சேர்ந்த திபெத் கிளைத் தலைவர் சூகாங் துதான்கோச்சு, நேற்று பேசுகையில், இந்தத் திபெத் பண்பாட்டு வாரம் மூலம், கார்மேக் மக்கள், திபெத்தின் பண்பாடு, திபெத் மக்கள் மற்றும் வளர்ச்சியை அறிந்துகொள்வதற்குச் சன்னல் ஒன்றைத் திறந்து வைத்து, திபெத்துக்கும் கர்மேக்கிற்குமிடையில் பண்பாட்டு பரிமாற்றத்தையும் பொருளாதார ஒத்துழைப்பையும் விரைவுபடுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
கர்மேக் குடியரசின் தலைமையமைச்சர் கொசாச்சிகொ இந்நடவடிக்கையில் கலந்துகொண்டு பேசுகையில், இது, கர்மேக்கிற்கும் திபெத்துக்குமிடையிலான ஒத்துழைப்புக்கு அருமையான எதிர்காலத்தைத் திறந்து வைக்கும் என்று விருப்பம் தெரிவித்தார்.
ரஷியாவின் கர்மேக் குடியரசின் முதலாவது துணைத் தலைமையமைச்சர் மெஜியேவும், திபெத் பண்பாட்டு வாரத்தின் பிரதிநிதிக்குழுவினரைச் சந்தித்துரையாடினார். திபெத் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு பிரதேசங்களுடன் தொடர்பையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த, கர்மேக் குடியரசு விரும்புவதாக, அவர் தெரிவித்தார்.
|