• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-13 10:45:38    
சீனாவில் பல்கலைக்கழகத் தலைவர்களின் சராசரி வயது

cri

தற்போது சீனாவிலுள்ள பல்கலைக்கழகத் தலைவர்களின் சராசரி வயது 52. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், வெளிநாட்டில் கல்வி பயின்று நாடு திரும்பியவர்கள்.அவர்களின் சராசரி பதவிக்காலம், 4 ஆண்டுகள்.

பெய்ஜிங்கிலுள்ள சீன மக்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று அண்மையில் மேற்கொண்ட கள ஆய்வில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

சீனாவில் 1792 உயர் நிலை கல்வி நிலையங்களைச் சேர்ந்த தலைவர்கள் இக்கள ஆய்வுக்குட்படுத்தப் பட்டனர். இத்தலைவர்களின் கல்வித் தகுதிகள்,தொழில் அனுபவங்கள் ஆகியவற்றை இக்கள ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது. அவர்கள் பெற்ற உச்சக் கல்விப் பட்டங்களுக்கு இணங்க, 30.9 விழுக்காட்டுப் பல்கலைக்கழகத் தலைவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

பிளாஸ்திக் புட்டிகளாலான வீடு

செர்பிய நாட்டில், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர், பிளாஸ்திக் புட்டிகளை முக்கிய கட்டடப் பொருளாகக் கொண்டு வீடு ஒன்றைக் கட்டியமைப்பதில் வெற்றி கண்டுள்ளார்.

தோமிஸ்லாஃபு ராடோவானொவிச்சி என்னும் இந்த இயல்பியல் பேராசிரியர், மாற்றுக் கட்டிடப் பொருட்கள் பற்றி மாணவர்களுடன் விவாதித்த போதே, இத்தகைய ஒரு வீட்டைக் கட்டும் எண்ணம் தங்களுக்கு ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற பின், செர்பிய தலைநகரான பெல்கிரேட்டின் தெற்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு சிறு நகரில், அவர் தமது விருப்பத்தை நனவாக்கினார். அவரும் தம் மாணவர்களும் பொறுக்கி எடுத்த 14000 பிளாஸ்திக் புட்டிகளை முக்கிய கட்டிடப் பொருளாகக் கொண்டு இவ்வீட்டை வெற்றிகரமாகக் கட்டி முடித்தனர்.

ஒரே அலையில் சறுக்கி விளையாடுவதில்

உலக காதனை!

கடலில் ஒரே பெரிய அலையில், ஒரே நேரத்தில் 84 பேர், சறுக்குப்பலகைகளுடன் சறுக்கி விளையாடி, உலக சாதனை படைத்துள்ளனர். பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகர கடற்கரையில், இச்சாதனை அண்மையில் நிகழ்த்தப்பட்டது.

கடலில் எழும் அலைகள், வெகு சில விநாடிகளே நீடிக்கவல்லவை. கலையை அடையும்போது அது உடைந்து, கரைந்துவிடும். எழும் அலையைப் பார்ப்பது, கண்களுக்கு நல் விருந்தாகும்.

தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள், இதற்கு முன் இந்தச் சாதனையை தென்னாப்பிரிக்காவில் நிகழ்த்தினர். அங்கு ஒரே அலையில் 73 பேர், ஒரே நேரத்தில் பலகைகளுடன் சறுக்கினர். அவர்களைக், கரையில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

அந்தச் சாதனைதான், இப்போது பிரேசிலில் முறியடிக்கப்பட்டது.

கோழிக்கறி புரதத்தில் இருந்து பால்

மாட்டுப் பாலுக்கு மாற்றாக, கோழிக்கறி புரதத்தில் இருந்து புதிய வகைப் பால் தயாரிப்பதில் தாய்லாந்து மருத்துவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

பல குழந்தைகளுக்கு மாட்டுப் பால் ஒத்துக்கொள்ளாத நிலையில், இந்த கண்டுபிடிப்பு, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்து விளங்குகிறது.

தாய்லாந்தில் ஸ்ரீராஜ் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள், கோழிக்கறியில் உள்ள புரதத்தில் இருந்து பால் தயாரிப்பதற்கான புதிய வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாலில் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

'இந்தப் புதிய பால் பொருள், சத்து மிகுந்தது. அத்துடன், எளிதில் செரிக்கக்கூடியது என ஸ்ரீராஜ் மருத்துவமனையின் தலைவர் சகன்சதயாதரன் கூறியுள்ளார்.

'ஆண்டுதோறும் தாய்லாந்தில் 8 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 20 விழுக்காட்டு குழந்தைகளுக்கு மட்டுமே, தாய்ப்பால் ஊட்டப்படுகிறது. மீதமுள்ள 6 லட்சம் குழந்தைகளுக்கு, பவுடர் பால்தான் தரப்படுகிறது'என ஆய்வுக் குழுவின் தலைவர் ஜிரபினியோ கூறியுள்ளார்.

மாட்டுப் பால் ஒவ்வாமையால் தாய்லாந்தில் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன.

சோயா பவுடர் பாலுடன் ஒப்பிடும்போது, கோழிக்கறி புரதத்தில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள பால்மூலம், குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுவது, 8 மடங்கு குறைவாகவே உள்ளது. 5 ஆண்டு சோதனைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்து ஆய்வு குழு, கோழிப் புரதத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாலுக்கு, கடந்த ஆண்டு செப்டம்பரில் காப்புரிமை பெற்றுள்ளது.

தற்போது கோழிக்கறியில் இருந்து குழந்தைகளுக்கும் சிரார்களுக்கும் உணவுப் பொருள் தயாரிக்கும் ஆய்வில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றர்..