• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-14 10:10:40    
கலையில் விருப்பம் மிக்க மியோ இனம்

cri

மியோ இன மக்கள், சீனாவின் guizhou, hunan, yunnan, Sichuan, guangxi, hubei, hainan முதலிய மாநிலங்களில் வாழ்கின்றனர். ஹுநான் மாநிலத்தின் மேற்கு பகுதியில் பெருமளவில் குவிந்து வசிக்கின்றனர். மியோ இனமக்களிர் பெரும்பாரோர் மலைச்சரிவு பிரதேசங்களிலும் மலையடிவாரங்களிலும், வேறு சிலர் குளிர்ந்த மலை பிரதேசங்களிலும் வசிக்கின்றனர். மியோ இனத்தின் மக்கள் தொகை, 89 லட்சத்து 40 ஆயிரமாகும். அவர்கள் மியோ மொழி பேசுகின்றனர்.

மியோ இனம், நீண்டகால வரலாறு வாய்ந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே, qin han வம்ச காலங்களில், அவர்களின் மூதானதயர் ஹு நானின் மேற்கு பகுதியிலும் guizhouயின் தெற்கு பகுதியிலும் செறிந்து வாழ்ந்தனர்.

1951ம் ஆண்டு முதல், மியோ இனத் தன்னாட்சி பிரதேசங்களும் மாவட்டங்களும் நிறுவப்பட்டன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வேளாண்துறையில்

இயந்திரமயமாக்கம் நனவாகியுள்ளது. எல்லைபுறத்திலுள்ள

ஊர்களில் நெடுஞ்சாலை மட்டுமல்ல, இருப்புப் பாதையும் கட்டியமைக்கப் பட்டுள்ளது.

மியோ பிரதேசத்தில்,தொடக்கப் பள்ளிகளும் இடை நிலை பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் நிறுவப்பட்டுள்ளன. மொழியியல், வரலாறு, இலக்கியம், கலை, அறிவியல் தொழில் நுட்பம் முதலிய துறைகளில் ஈடுபடும் நிபுணர்கள்

ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தன்னாட்சிப் பிரதேசங்களிலும் மாவட்டங்களிலும் மருத்துவமைகள் காணப்படுகின்றன. மக்களின் வாழ்க்கை ஆண்டுக்கு ஆண்டு மேம்பட்டு வருகிறது.

மியோ இன மக்கள், தனிச்சிறப்பு மிக்க பலவகை நாட்டுப்புற இலக்கியங்களையும் கலைகளையும் படைத்துள்ளனர். இவற்றில் கவிதைகளும் செவிவழிக் கதைகளும் முக்கியமாக இடம்பெறுகின்றன. இவை வாய் வழி மூலம் இன்றும் பரவிவருகின்றன.

மியோ இனமக்கள் ஆடல்பாடலில் அதிக விருப்பம் கொண்டவர்களாவர். மியோ இன இசையும் நடனமும் இசை

நாடகமும் நீண்ட வரலாற்றைக் கொண்டவை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ் பெற்றவை.

மியோ இன இளைஞர்கள், காதலித்து திருமணம் செய்வது வழக்கம். பெண்களும் ஆண்களும் பாட்டு பாடுவதன் மூலம் காதலர்களாக மாறி திருமணம் செய்கின்றர்.