• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-14 14:19:03    
திபெத் கிராமவாசிகளின் புதிய உறைவிட வசதி

cri

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம், "உலகின் கூரை" என அழைக்கப்படுகின்றது. திபெத்தின் மேற்கிலுள்ள அலி பிரதேசம், "உலகக் கூரையின் கூரை" என்று அழைக்கப்படுகின்றது. சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரத்தைத் தாண்டிய அலி பிரதேசத்தில், விவசாயிகள்-ஆயர்களின் வாழ்க்கை நிலை மிகவும் இன்னலாக இருந்து வந்தது. ஆனால், கடந்த ஆண்டு முதல் அலி பிரதேசத்தில், உறைவிட வசதி திட்டப்பணி பன்முகங்களிலும் நடைமுறைக்கு வரத் துவங்கியது. அரசின் பெரும் தொகை நிதியுதவியுடன், செங்கல் கட்டமைப்புடைய புதிய வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டன. விவசாயிகளும் ஆயர்களும் தத்தமது பாழடைந்த மண்-மரக் கட்டமைப்புடைய வீடுகளிலிருந்து அகலமான ஒளிமயமான இப்புதிய வீடுகளில் குடியேறினர். இன்றைய நிகழ்ச்சியில் அலி பிரதேசத்திலுள்ள காமு என்னுமிடத்தில் உள்ளூர் திபெத் இனத்தவர்கள் புதிய வீடுகளில் குடியேறியதற்குப் பிந்திய அவர்களின் வாழ்க்கையை உணர உங்களை அழைத்துச் செல்கிறோம்.

 
காமு கிராமம், திபெத்திய அலி பிரதேச அரசு நிறுவனம் அமைந்துள்ள Shi Quan He பட்டினத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வரிசையான, சீரான, திபெத் பாணியுடைய புதிய வீடுகள் எமது செய்தியாளர்களின் கண்களில் தென்படுகின்றன. இரண்டு மாடிகளுடைய சில சிறிய கட்டிடங்கள், பார்ப்பதற்கு உயர் நிலை பண்ணை வீடுகளைப் போல காட்சியளிக்கின்றன. காமு கிராமத்தலைவர் Gama Ciren எமது செய்தியாளரிடம் பேசுகையில், ஓராண்டுக்கு முன் இங்கு ஒரே வெற்றிடமாக இருந்தது என்று கூறினார். விவசாயிகளும் ஆயர்களும் தொலைவிலுள்ள மலைப் பிரதேசங்களில் வாழ்ந்திருந்தனர். 2006ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் சீன அரசின் 41 லட்சம் நிதியுதவியுடன் காமு கிராமத்தில், உறைவிட வசதி திட்டப்பணி துவங்கியது என அவர் கூறினார்.

 
"முழு கிராமத்திலும் 57 குடும்பங்கள் உள்ளன. மக்கள் தொகை 279 ஆகும். வெளியூரில் உழைப்பதன் மூலமும், கால்நடை வளர்ப்புத்தொழில் மூலமும் அவர்கள் வருமானம் பெறுகின்றனர். இங்கு குடியேறுவதற்கு முன், அவர்களின் வீடுகள் மண்ணால் கட்டப்பட்டன. கடந்த ஆண்டு உறைவிட வசதி திட்டப்பணி நடைமுறைக்கு வந்த பின், அரசின் கவனத்துடன் 56 குடும்பங்களுக்கென புதிய வீடுகள் கட்டப்பட்டன" என்றார், அவர்.
உறைவிட வசதி திட்டப்பணிக்கிணங்க, சுமார் ஐயாயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்பில் புதிய வீடுகள் கட்டப்பட்டன. காமு கிராமத்தில், 20 குடும்பங்கள், 100 சதுர மீட்டர் நிலப்பரப்புடைய வீடுகளில் வாழ்கின்றன. வேறு குடும்பங்களில் மிகச்சிறிய வீடுகளின் பரப்பளவும் 60 சதுர மீட்டராகும்.
முன்பு, காமு கிராமவாசிகள், குட்டையான, இருளான, ஒடுக்கமான வீடுகளில் வாழ்ந்தனர். ஒரு படுக்கை அறை, வரவேற்பு அறை, ஒடுக்கமான சமையல் அறை ஆகியவை மட்டும் ஒரு குடும்பத்தில் உள்ளன. விருந்தினர் வந்தால், குடும்பத்தினர்கள் அனைவரும் வெளியே தூங்க வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக குளிர்காலத்தில், வெளிப்புறத்தில் அதிக குளிர். அடிக்கடி, கால்களில் குளிரால் காயம் ஏற்படுவது வழக்கம். கிராமவாசி Laba Dunzhu பேசுகையில், அப்போது, வீட்டைக்கட்டியமைக்க நினைத்ததாகவும் ஆனால் பணமில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், 100 சதுர மீட்டருக்கு அதிமான பரப்புடைய புதிய வீடு தற்போது கட்டிமுடிக்கப்படவுள்ளது என்று கூறினார்.

 
"இவ்வீட்டைக்கட்டுவதற்கு மொத்தம் 50 ஆயிரம் யுவான் செலவு. பத்தாயிரம் யுவானுக்கு மேலான தொகையை மட்டும் செலவழித்தேன். மீதமான செலவு, அரசால் கொடுக்கப்பட்டது. இப்போது, அடிப்படையில் இவ்வீடு கட்டியமைக்கப்பட்டுள்ளது. முன்பு எனது வீடு, இப்புதிய வீட்டை விட நன்றாக இல்லை. மிகவும் சிறியது" என்று அவர் கூறினார்.
கிராமவாசிகளான Laba Dunzhu, Ciren Yangzong தம்பதியின் குடும்ப வீடுகளில், திபெத் பாணியுடைய வீட்டுப் பயன்பாட்டு பாத்திரங்கள் எல்லாம் உண்டு என்பதை எமது செய்தியாளர் கண்டார். அறைகளில் ஒளிவீசுகின்றது. வரவேற்பு அறை, படுக்கை அறை, சமையல் அறை, கிடங்கு அறை எல்லாம் உள்ளன. முழுக் கட்டிடமும் திபெத் பாணியில் அமைகின்றது. அன்றி, நவீன சூழ்நிலையும் தாண்டவமாடுகின்றது. வீடுகளின் வெளிப்புற வடிவமைவு மிகவும் அழகானது. அன்புமிக்க முதியவர் Laba Dunzhuயின் துணையுடன், படுக்கை அறை, சமையல் அறை, வரவேற்பு அறை முதலியவற்றை செய்தியாளர் பார்வையிட்டார். முதியவர் உணர்ச்சிவசப்பட்டு கூறியதாவது: 
"இப்போது எனக்கு 59 வயதாகின்றது. முன்பு, இவ்வளவு நல்ல வீடுகளில் வசித்ததில்லை. இவ்வாண்டு தலைகீழான மாற்றம் ஏற்பட்டது. மிகவும் மகிழ்ச்சி" என்றார்.


புதிய வீடுகளில், தொலைக்காட்சி, தொலைபேசி, வானொலி எல்லாம் உண்டு. இது, கிராமவாசிகளுக்கு மனச்சுகம் தருகின்றது. முன்பு மூடிய நிலையில் வாழ்ந்திருந்த திபெத் இன விவசாயிகளும் ஆயர்களும் வெளிப்புற உலகை மேலும் அறிந்து கொண்டுள்ளனர். தவிரவும், மேலதிகமானோர் பீடபூமியிலிருந்து வெளியேறி, உட்புற பிரதேசங்களில் பணி புரிகின்றனர். காமு கிராமத் தலைவர் Gama Ciren அறிமுகப்படுத்துகையில் தற்போது காமு கிராமத்தில் மொத்தம் 115 உழைப்பாளர்கள் உள்ளனர். அவர்களில் 50 விழுக்காட்டினர் வீட்டில் தங்கியிருந்து, விளை நிலம், கால் நடை பராமரிப்பில் ஈடுபடுகின்றனர். வேறு 50 விழுக்காட்டினர், வெளியூரில் பணி புரிகின்றனர். இது போக, பல குழந்தைகள் வெளியூர்களில் கல்வி பயில்கின்றனர். முதியவரின் மகள், Mima Puchi, சிங்கியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேசத்தில் படிக்கின்றனர். எமது செய்தியாளர் வீட்டிற்கு வருகை தந்த உடன், Ciren Yangzong மூதாட்டி, இச்செய்தியை தொலைபேசி மூலம் தொலைத்தூரத்தில் உள்ள தமது மகளுக்குத் தெரிவித்தார். மூதாட்டி வெகு விரைவாக பேசியதால், அவர் என்ன சொன்னார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. இருந்த போதிலும், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதை அவரது உரையாடலிலிருந்து எமது செய்தியாளர் அறிந்து கொண்டார்.