• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-17 14:08:56    
மனிதர், இயற்கை மற்றும் இணக்க உலகம்

cri

முதலாவது சீன Qinhai ஏரி சர்வதேசக் கவிதை விழா அண்மையில் Qinhai மாநிலத்தில் நிறைவுற்றது. சீனாவில் முதல் முறையாக நடைபெற்ற பெரிய ரகச் சர்வதேசக் கவிதை விழா இதுவே ஆகும். சீனா உள்ளிட்ட 35 நாடுகளின் கவிஞர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

கவிஞர்களைப் பொறுத்து, சி்ன் காய்-திபெத் பீடபூமி, ஒரு அற்புதமான இடமாகும். மேலதிமான அனுப்பவம் மற்றும் கண்டுபிடிப்பை இது எடுத்துக்காட்டுகிறது. இவையெல்லாம் மக்களின் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக மாறும். Qinhai சர்வதேசக் கவிதை விழா, மனிதர், இயற்கை மற்றும் இணக்க உலகம் என்ற தலைப்பைக் கொண்டு விளங்கியது.

புகழ் பெற்ற கவிஞரும், விமர்சகருமான Shucai இந்த விழாவின் அமைப்பாளர்களில் ஒருவராவர். இக்கவிதை விழா பற்றிக் குறப்பிடுகையில், தனிச் சிறப்பு வாயந்த இவ்விழாவின் தலைப்பானது. வரலாற்றில், மனிதரையும், இயற்கையின் அழகு, படைப்பு, நிலையான உறவு ஆகியவற்றையும் வெளிப்படுத்துவது, குறிப்பிடத்தக்கது. இக்கவிதை விழா, அளவில் முன் கண்டிராதது. நான் முன்பே பங்கேற்ற ஐரோப்பிய சர்வதேசக் கவிதை விழாகளை விட, இது அளவில் பெரியது. விழாவுக்கு வருகை தந்தோரின் எண்ணிக்கையும் மிக அதிகமானது என்று அவர் கூறினார்.

முதலாவது Qinhai சர்வதேக் கவிதை விழா, சீனக் கவிஞர்களின் மாபெரும் விழா மட்டுமல்ல, உலகில் பல்வேறு நாடுகளின் கவிஞர்களுக்குப் பண்பாட்டுத் தொடர்பு மேடை ஒன்றையும் வழங்கியது. இது மேலும் முக்கியமானது.

 

கவிதைகளைப் பாடுவது இந்த விழாவின் முக்கிய உள்ளடக்கமாகும். எல்லா கவிஞர்களும் ஏற்பாட்டுக் குழுவிடம் இவ்விழாவுக்கென சிறப்பாகப் படைத்த கவிதைகளை ஒப்படைத்தனர். இதில் கிரேக்கக் கவிஞர் Petros Mastoris இன் கவிதை, தனிச் சிறப்பு வாய்ந்தது. 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்ஜிங்கில் நடைபெற்ற உள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலக இணக்கம் மற்றும் மனிதக் குல அமைதியை எடுத்துக்காட்டும் முக்கிய நிகழ்ச்சியாகும் என்று அவர் கூறினார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குச் சிறப்பாக இயற்றிய "ஒலிம்பிய 2008" என்னும் கவிதையை அவர் பாடினார்.

கவிதை விழாவின் போது, உள் நாட்டு வெளிநாட்டு கவிஞர்கள், கிராமங்கள் மற்றும் கால்நடை வளர்ப்புப் பண்ணைகளில் பயணம் மேற்கொண்டனர். சீனாவின் தாய் ஆறான மஞ்சள் ஆறு, எல்லையற்ற புல்வெளி உள்ளிட்ட இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளித்தனர். அழகான Qinhai ஏரி கரையில் கவிஞர்கள், இசைவிழாவையும் கேட்டு மகிழ்ந்தனர். அத்துடன், Qinhai ஏரி சர்வதேசக் கவிதை பற்றிய அறி்க்கை ஒன்றிலும் அவர்கள் கையொப்பமிட்டனர்.