• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-18 16:40:02    
திருநெல்வேலி கடையாலுருட்டி நேயர்களின் கருத்து

cri

கலை: திருநெல்வேலி கடையாலுருட்டி நேயர் எம். பிச்சைமணி எழுதியது. தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியை தொடர்ந்து கேட்டு வருகிறேன். சாங் ஊ என்றால் முற்பகல், சியா ஊ என்றால் பிற்பகல், வான் சாங் என்றால் இரவு, தியென் என்றால் மணி, பஃன் என்றால் நிமிடம் போன்ற சொற்களை கற்றுக்கொண்டுள்ளேன். மேலும் சீனாவில் பள்ளி இடைநின்ற 29 லட்சம் குழந்தைகள் மீண்டும் பள்ளி செல்கின்றனர் என்று கேட்டு மகிழ்ந்தேன் என்று எழுதியுள்ளார்.


க்ளீட்டஸ்: தொடர்ந்து இரும்பேடு கே. பவித்ரா எழுதிய கடிதம். சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியில் சின்சியாங் பகுதியில் வாழும் மங்கோலிய இனத்தவரின் பாதுகாப்பு பற்றிய பிரச்சனைகளும் அது தொடர்பாக சீனக் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டமும் பற்றி அறிந்தேன். 1919ம் ஆண்டு மே திங்கள் 4ம் நாள் நடந்த இந்த மாணவர் போராட்டம். அடக்குமுறைக்கு முகம் கொடுத்து பின் இறுதியில் வெற்றி பெற்றது. இவர்கள் நினைவாக இளைஞர் விழா நடத்தப்படுகிறது என்று அறிந்துகொண்டேன் என்று எழுதியுள்ளார்.
கலை: தொடர்ந்து இலங்கை காத்தான்குடி நேயர் ஜே. எம். ரஹ்மி எழுதிய கடிதம். தமிழ் மூலம் சீனம் நூல் கிடைத்தது. அனைவருக்கும் புரியும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலை வாசிப்பதால் நன்கு பயனடையலாம் என்று நம்புகிறேன். மேலும் மலர்ச்சோலை நிகழ்ச்சியில் உலக அதிசயங்களின் தரப்படுத்தல் பற்றிய விபரமும், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பற்றிய தகவலும் நேயர்களாகிய எங்களுக்கு பயனுள்ள தகவல்களாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.


க்ளீட்டஸ்: அடுத்து பெத்துரெட்டிபட்டி ரா. பத்மநாதன் எழுதிய கடிதம். தமிழ் நிகழ்ச்சிகள் அனைத்தும் நன்றாக உள்ளன. சீனச் சமூக வாழ்வு, சீனப் பண்பாடு, சீன வரலாற்றுச் சுவடுகள் ஆகியவை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அரிய பொக்கிஷங்களாகும். தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கக்கூடிய நிகழ்ச்சிகள் இவை. கடந்த 44 ஆன்டுகளாக தமிழ் ஒலிபரப்பு நடைபெற்று வருவதும், சீன வானொலி நேயர் மன்றம் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது என்பதும் பாராட்டுக்குரியவை என்று எழுதியுள்ளார்.
கலை: அடுத்து இலங்கை நேயர் ஏ. எம். உஃபாயித் எழுதிய கடிதம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் தொடர்புகொள்ளமுடியவில்லை. இருப்பினும் எனக்கு தொடர்ந்து நீங்கள் அனுப்பும், இதழ்களும், புத்தகமும் கிடைத்ததில் மகிழ்ச்சி. திருமணமானதால் முன்பு போல் கடிதத் தொடர்பை வைக்காமலிருந்தபோதும், தவறாமல் வானொலியைக் கேட்டு வருகிறேன். தொடரும் உங்கள் தொடர்புக்கு நன்றிகள் என்று எழுதியுள்ளார்.
உஃபாயித் அவர்களே உங்களுக்கு திருமணமானது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் இல்வாழ்க்கை நல்லபடி அமைய நேயர்களோடு இணைந்து வாழ்த்துகிறோம்.


க்ளீட்டஸ்: அடுத்து சேந்தமங்கலம் எஸ். ராஜநரசிம்மன் எழுதிய கடிதம். அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் சீனாவில் நகரங்களில் வாழ்கினறவர்கள் அதிக பணம் செலவழிக்கவேண்டியிருப்பது குறித்து கேட்டேன். சிறிய தொல்லைக்களுக்குக்கூட பெரிய மருத்துமனைகளில் சிகிச்சை பெறுவதையே மக்கள் விரும்புகின்றனர். நகரங்களின் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், பெரிய மருத்துவமனைகளில் அதிகக் கூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் குடியிருப்புகளுக்கு அருகில் மருத்துவமனைகள் நிறுவப்பட்டு செயல்படுவது இப்பிரச்சனைக்கு தீர்வாக அமைந்துள்ளது என்று எழுதியுள்ளார்.