xu yi rong என்பவர் வேளாண் நிபுணராவார். சீனாவின் மற்றொரு புகழ்பெற்ற அறிவியலாளர் Yuan long ping போல, நெல் பயிரிடும் துறையில் மாபெரும் ஆய்வுச் சாதனை பெற்றவராவார்.

வடக்கில் தாழ்ந்த தட்பவெப்ப காலநிலை பிரதேசத்தில் நெல்லை வளர்ப்பது பற்றி xu yi rong வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து வருகின்றார். வடக்குச் சீனாவிலுள்ள பல இலட்சம் விவசாயிகள் அவருடைய சாதனையினால், ஆண்டுக்கு பல கோடி டன் எடையுடைய தானியம் கிடைக்கப் பெறுகின்றனர். ஆகையால், அவர் குளிர் பிரதேசத்தின் நெல் தந்தையாக பாராட்டப்படுகின்றார். இருந்த போதிலும், நான் நிபுணர் அல்ல, ஒரு நெல்லை வளர்ப்பவர் மட்டுமே என்று xu yi rong தெரிவித்தார். அவர் கூறியதாவது, விவசாயிகளுடன் ஒப்பிடும் போது, 1951ம் ஆண்டு முதல் நெல் வளர்ப்பில் ஈடுபடத் துவங்கினேன். ஆகையால், நெல் பயிரிடும் நேரம் அதிகம். 2வது, அவர்களை விட அதிக சிறப்பு அறிவு எனக்கு உண்டு. ஆனால், என்னை விட அவர்களுக்கு நடைமுறை அனுபவம் அதிகம் என்றார் அவர்.

இவ்வாண்டு 83 வயதான xu yi rongஇன் தலைமுடி எல்லாம் வெள்ளையாகிவிட்டது. நெல்லை வளர்ப்பது பற்றி அவர் வாழ் நாள் முழுவதும் ஆராய்ந்து வருகின்றார். வயல் தான் அவர் மிகவும் விரும்பும் இடமாகும். நெல்லைப் பற்றி விவாதிக்க அவர் மிகவும் விரும்புகின்றார் என்று அவரை அறிந்தவர்கள் எல்லோருக்கும் தெரிகின்றது. அவர் அடிக்கடி வயலுக்குச் சென்று, விவசாயிகளுடன் நெற் பயிர் பற்றி விவாதிக்கின்றனர். தம்மை ஒரு நிபுணராக அவர் கருதவில்லை. நெல் மீதான ஆர்வம், அவருடைய வாழ்க்கை அனப்பவத்திலிருந்து பிரிக்கப்பட முடியாது. xu yi rong 1924ம் ஆண்டு வடகிழக்குச் சீனாவின் லியோ நிங் மாநிலத்தின் பெய் நிங் நகரில் பிறந்தார். மாணவ பருவத்தில், ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்தது. வாழ்க்கை மிகவும் கடினமானது. அப்போது சோற்றைச் சாப்பிட முடியாது. இந்த நிலைமையை அவர் மீளாய்வு செய்து கூறியதாவது சோற்றைச் சாப்பிடும் தகுநிலை சீனருக்கு இல்லை என்று அப்போது, ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் கருதினர். ஆகையால், விழா நாட்களின் போது சோற்றைச் சாப்பிடும் போது, மறைமுகமாக இருக்க வேண்டியிருந்தது என்றார் அவர்.

அப்போது முதல், சீன மக்கள் அனைவரையும் சோற்றைச் சாப்பிடச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் xu yi rongக்கு உண்டு. வடகிழக்கு சீனா கடும் குளிர் பிரதேசத்தில் அமைந்ததால், நெல்லின் உற்பத்தி அளவு தாழ்ந்த நிலையில் இருந்தது. நவ சீனா நிறுவப்பட்ட பிறகு, பல்கலைக்கழக பட்டம் பெற்ற xu yi rong, வடகிழக்கு பிரதேசத்திலுள்ள ஹெய் லுங் ச்சியாங் மாநிலத்தின் ஒரு பண்ணைக்குச் சென்று, குளிர் பிரதேசத்தில் நெல்லை வளர்ப்பது பற்றி சிறப்பாக ஆராயத் துவங்கினார். அவர் கூறியதாவது

நெல்லை வளர்ப்பது பற்றி ஆராயந்து வருகின்றேன். எனக்கும் இதற்குமிடையில் பிரிக்க முடியாத உணர்வு ஏற்பட்டுள்ளது. நெல்லைக் காண முடியத நிலையில், ஏமாற்றம் அடைகின்றேன் என்றார் அவர்.
|