• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-18 16:51:32    
தேயெள இனம்

cri
உள்ளூரில், தேயெள இனத்துக்கு மட்டும் உள்ள புளித்தேனீர் இருக்கிறது. கோடைக்காலத்தில் இதை அருந்தினால், உடலில் வெப்பம் நீங்கும். வாயைச் சுத்தமாக்கும். கடந்த பல நூற்றாண்டுகளாக இது பரவி வருகின்றது. தேயெள இன மக்கள் இப்புளித் தேனீரைத் தயாரிக்கும் செய்முறை மற்றும் சுவையினால், இத்தகைய புளித் தேனீரை, தேயெள இன மக்கள் மட்டுமே அருந்துகின்றனர். உள்ளூரிலுள்ள தனித்தன்மையுடைய உற்பத்தி மற்றும் வாழ்க்கைச் சூழல் காரணமாகவே, தேயெள இனம் இந்த தனிச்சிறப்பியல்புடைய தேனீர் தயாரிப்பு முறையை உருவாக்கியது. தேயெள இனத்தின் வரலாற்றைப் புரிந்து கொள்ளாமல், இப்புளித் தேனீரின் உண்மையான ருசியைச் சுவைபார்க்க முடியாது. அங்குள்ள தேனீர் கலை வல்லுநர் லு கோ லி அம்மையார் இது பற்றி எடுத்துக்கூறியதாவது:


"இப்புளித் தேனீரை அருந்திய பின், உடலில் வெப்பம் நீங்கும். மட்டுமல்ல, செறிமானத்துக்கும் துணையாயிருக்கும். தொண்டைக்கு இதமாக இருக்கும்" என்றார்.
இப்போது, புளித்தேனீர் தயாரிப்பவர்கள் குறைவு. இருப்பினும் தேயெள இனத்தவர்களின் வாழ்க்கையில் தேனீர், முக்கிய இடம் வகிக்கின்றது. தேயெள இன மக்கள் தமது உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்கும் போது, அல்லது திருமணம் நாட, நடுவர் தொடர்புடைய வீட்டிற்குப் போகும் போது, தேயிலையை அன்பளிப்புப் பொருளாகக் கொண்டு செய்ய வேண்டும். திருமண விழா நடைபெறும் போது, ஆண் தரப்பு தயாரித்த தேயிலைகளையும் இதர அன்பளிப்புப் பொருட்களையும் நடுவர் பெண் தரப்பு குடும்பத்தின் பெரியவர்களிடம் வழங்க வேண்டும். அவர்கள் இவற்றை ஏற்றுக்கொண்ட பின்னரே, மணமகன், மணமகளை வரவேற்க முடியும். தேயெள இனத்தின் சமூக வாழ்க்கையின் அனைத்து துறைகளும், தேனீரிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை. இதனால், தேயிலையின் நுகர்வும் மிகவும் அதிகம். எனவே, தேயெள இனத்தவர்களின் வீடுகளுக்கு முன்னும் பின்னும் தேயிலை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. காற்றிலும் எந்நேரத்திலும் தேயிலை வாசம் வீசுகின்றது.

 
தேயிலையின் மணத்துடன் தேயெள இனத்தவர்கள், நெடிய வரலாற்றுக் கூடாதுச் சென்றுள்ளது என்ன என்றால், "Shui Gu" அதாவது நீர் முரசு ஆகும். இது, தேயெள இன மக்களின் தனித்தன்மை வாய்ந்த ஒரு வகை இசைக் கருவியாகும். இதர முரசுகளிலிருந்து இது வித்தியாசமானது. என்ன வித்தியாசம் என்றால், நீர் முரசின் உடம்பில் ஒரு சிறிய துவாரம் உள்ளது. இத்தகைய முரசைப் பயன்படுத்தும் போது, அச்சிறிய துவாரத்துக்குள் நீரை ஊற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு முரசின் ஒலி கேட்பதற்கு மேலும் இனிமையானதாக இருக்கும்.
நீர் முரசு, தேயெள இன மக்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு இசைக்கருவியாகும். தேயெள இனத்தின் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் சொந்த நீர் முரசு உண்டு. சில பெரியவை. வேறு சில சிறியவை. முன்பு, கிராமத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நிகழும் போதெல்லாம், கிராமத்தின் பெரியவர்கள், நீர் முரசை கொட்டுவார்கள். பின்னர், அனைவரும் கலந்தாய்வு நடத்துவார்கள். இன்று நீர் முரசு, தேயெள இன கிராமத்தில் இன்னமும் பேணிக்காக்கப்படுகின்றது. நீர் முரசின் ஒலியைக் கேட்பவர், இன்பம் அடைவார் என்று பாரம்பரிய கதை ஒன்று கூறுகின்றது.


நீர் முரசின் ஒலி, இம்மலைக்கிராமத்தில் மகிழ்ச்சியின் அடையாளமாகத் திகழ்கின்றது.
நேயர்கள் இது வரை "தேயிலையின் தலைமுறையினரான தேயெள இனம்" பற்றி கேட்டீர்கள். இத்துடன் "சீனத் தேசிய இனக் குடும்பம்" நிகழ்ச்சி நிறைவடைந்தது.