• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-19 19:27:25    
அரசுப்பணி

cri

நீண்ட காலத்திற்கு முன், தற்போது லோயாங் என்று அழைக்கப்படும் நகரம் அமைந்துள்ள பகுதி ஷாவ் பிரதேசம் என்று அறியப்பட்டது. அங்கே வாழ்ந்த ஒரு மனிதர் அரசுப்பணி பெறுவதற்காக பல முறை முயன்று தோல்வியடைந்தவர். தனது மூத்த வயதில் ஒரு நாள், வீதியோரமாக அமர்ந்து, வெண்ணிற தாடி முகத்தில் சரிந்து கிடக்க, கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்.

ஏன் அய்யா அழுகிறீர் என்று அவரிடம் சிலர் கேட்டனர்.

அதற்கு அவர், நான் அரசில் பணிபுரிய பல முறை முயற்சி செய்தேன், ஆனால் என் முயற்சிகள் பலன் தரவில்லை, வீணாய் போயின. இப்போது எனக்கு வயதகைவிட்டது. இனி எனக்கு அரசுப்பணி பெற வாய்ப்பில்லை. அதனால்தான் அழுகிறேன் என்றார்.

அதெப்படி நீங்கள் முயன்றும் முடியாமல் போனது என்று கேட்டவர்களிடம், தன் சோகக்கதையை கூறினார்.

என் இளம் வயதில் நான் அர்சுப்பணி பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இலக்கியம், கலை இவற்றைக் கற்று தேர்ச்சி பெற விரும்பினேன். நல்லபடி கற்றுத்தேர்ந்து அரசுப்பணிக்கு என்னை தயார்படுத்தியபோது, அரசர் வயதில் மூத்தவர்களுக்கு மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை அளித்தார். அந்த அரசர் இறந்த பின் முடுசூடிய அடுத்த மன்னன், போர்க்கலையை பெரிதும் மதித்தவன். எனவே போர்க்கலையை கற்பதில் கவனம் செலுத்தினேன். போர்க்கலையிலும் நான் ஓரளவுக்கு நன்றாக தேறியவேலையில், மன்னன் இறந்துபோனான். அவனைத் தொடர்ந்து பதிவியில் வீற்ற அரசன், மிக இளம் வயதுடையவன். இளைஞர்களுக்கு அவன் தனது அரசில் முன்னுரிமை அளித்தான். எனக்கும் அதற்குள் வயதாகிபோக, அரசுப்பணி எனக்கு இல்லை என்றாகிபோனது. என்னால் அரசுக்கும் மக்களுக்கு பணிபுரிய இயலாமல் போனதை நினைத்துத்தான் அழுதுகொண்டிருக்கிறேன் என்றார் அந்த முதியவர்.

அரசுப்பணி திறமையுள்ளவர்களுக்கு கிடைக்கும் என்றாலும், அதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை.