சந்திர ஏரி அழகான காட்சி இடமாக மட்டுமல்ல, இயற்கையான கருவூலமாகவும் இருக்கிறது என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். 3 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய ஏரியில், பல வகை கனிமப் பொருட்கள் உள்ளன. இதனால், ஏரி நீர், உயிரினத் தூய்மைத் திறனை கொண்டுள்ளது. இயற்கை உயிரின வாழ்க்கைச் சூழல், வெகுவிரைவில் மேம்படுத்தப்பட்டு, மீட்கப்படலாம். தவிர, உள்ளூரின் கருப்பு மணல் சேறு, மூட்டு வீக்க நோய்க்கு நல்ல சிகிச்சை பயன் தருகிறது.

அழகான அற்புதமான இந்தக் காட்சி இடம் பற்றி, முன்பு, அலசான்னாவுக்கு அப்பாற்பட்ட பிற ஊர் மக்களுக்கு தெரியாது. 2001ம் ஆண்டில் தான், பாலைவன இயற்கைச் சூழலுக்கான சுற்றுலா இடமாக அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இக்காட்சி மண்டலத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது: 2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை செயற்கை வளர்ப்பு மூலம், ஏரியின் கரையோரத்தில் சுமார் 500 மீட்டர் நீளமான பசுமையான உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு நாடாவை உருவாக்கியுள்ளது என்றார் அவர்.

செய்தியாளர்கள் சந்திர ஏரியின் கரையிலுள்ள மணல் நிலத்தில் நடந்து, நிலமான ஏரி நீரையும் பச்சைப்பசேர் என்ற நாணலையும் பார்த்ததோடு, காட்டு வாத்து கத்துவதையும் அன்னப் பறவைகள் கீச்சு இடுவதையும் கேட்கலாம். இந்தக்காட்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒளிப்பதிவாளர்களை ஈர்த்துள்ளது. காட்டை மீட்பதில், இக்காட்சி மண்டலம் நீண்டகாலமாக முயற்சி செய்வது மட்டுமல்ல, எரியாற்றல் சிக்கனப்பாட்டிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் அதிகமான வேலை செய்து வருகிறது. இப்பொறுப்பாளர் எமது செய்தியாளரிடம் அறிமுகப்படுத்தியதாவது:

செயற்கை முறையில் ஏற்பட்டுள்ள கழிவுப் பொருட்களை, வகைப்படுத்திக் கையாண்டு வருகின்றோம். அத்துடன், கழிவு நீரைக் கையாளும் சிறப்பு வசதிகளும் உண்டு. நாள்தோறும் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழலுக்கான சீர்குலைவை பெருமளவில் குறைத்து வருகின்றோம். சந்திர ஏரி காட்சி மண்டலத்தின் இயக்குநர் குழுத் தலைவர் சொங் சியுன், எமது செய்தியாளரிடம் பேசுகையில், தமது முயற்சி மூலம், இந்த ஏரி, சீன பாலைவனப் பிரதேசத்தின் முன்மாதிரி இயற்கை காட்சி இடமாக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். உண்மையான உயிரின வாழ்க்கை சூழல், சாராரணப் பயணியரை உயிரின சுற்றுச்சூழலுக்கான புரிந்துணர்வாளராகவும், ஆதரிப்பாளராகவும், கடைசியாக, பங்கேற்பாளராகவும் மாற்ற வேண்டும். முழு சுற்றுப் பயணத்திலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி கருத்துக்களைப் புகட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனிச்சிறப்பியல்பான ஈர்ப்பு ஆற்றலினால், கடந்த சில ஆண்டுகளில், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஜப்பான் தென்கொரியா முதலிய நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பயணிகள் இங்கே வந்து சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.
|