இவ்வாண்டின் ஜனவரி திங்கள் முதல் செப்டம்பர் திங்கள் வரை, திபெத்துக்குச் சென்ற உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 32 லட்சம் ஆகும். கடந்த ஆண்டில் இருந்ததை விட, இது 60 விழுக்காட்டுக்கு மேல் அதிகமாகும். இதில், தொடர் வண்டி மூலம் திபெத்துக்குச் சென்ற பயணிகளின் எண்ணிக்கை, 12 லட்சத்தை எட்டும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா பணியகம் மதிப்பிட்டுள்ளது.
சிங் காய்-திபெத் இருப்புப் பாதை, போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டமை, திபெத்தின் சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சியை முன்னேற்றும் முக்கிய காரணம் ஆகும் என்று சுற்றுலா வட்டாரத்தினர் கருதுகின்றனர்.
|