• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-21 11:25:19    
தீப திருவிழாவைக் கொண்டாடும் யி இனம்

cri

யி இன மக்கள் தொகை,65 லட்சத்து 70 ஆயிரமாகும். அவர்கள் yunnan, Sichuan, guizhou முதலிய மாநிலங்களிலும் guangxi ச்சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசத்திலும் வாழ்கின்றனர்.

யி இனத்துக்கு சொந்த மொழி உண்டு. அதன் மொத்த சொற்களின் எண்ணிக்கை, ஆயிரத்துக்கும் மேலாகும். அது, சுமார் 13ம் நூற்றாண்டில் உருவாகியது. இதன் பண்பாடும் கலையும் வாழையடி வாழையாக நிலவி வருகின்றன. யி மொழியால் எழுதப்பட்ட வரலாறு, இலக்கியம், மருத்துவம் முதலிய படைப்புகளில், மதிப்பு மிக்க அரிய ஆவணங்கள் பல இடம்பெறுகின்றன.

யி இன மக்கள், முக்கியமாக வேளாண்துறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் கால்நடை வளர்ப்பு துறையைத் துணை தொழிலாகக் கொள்பவர்கள். கை தொழில் உற்பத்தியும் மிக சீராக வளர்ந்து வருகிறது.

சந்திர நாள் காட்டியின்படி, ஆண்டுதோறும் 6ம் திங்களின் 24ம் நாள், தீப திரு விழா. இது, யி இனத்தின் மிக விமாரிசையான விழாவாகும். பண்டையக் காலத்தில், ஒரு கொடிய குலத்தலைவரின் ஆட்சியை எதிர்க்கும் வகையில், யி இன பொது மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர். இந்நாளை தீப திரு விழாவாகக் கொண்டாட முடிவு செய்தனர். இவ்விழாவை 3 நாட்களாகக் கொண்டாடப்படுகின்றது. முதல் நாளில் அனைத்து குடும்பத்தினர்களும் கூடி மகிழ்வர். பிந்திய 2 நாட்களில், மற்போர்,குதிரைப் பந்தயம், மாட்டுச் சண்டை முதலிய நடவடிக்கைகள் நடைபெறும். இதையடுத்து, மாபெரும் விருந்து நடத்தி, இரவு முழுவதும் விழாவைக் கொண்டாடி மகிழ்வர்.

.

யி இன மக்கள், மதுபானம் மற்றும் தே நீரைக் குடிப்பது வழக்கம். மதுவால் விருத்தினரை வரவேற்கின்றனர். ஹன் இன மக்கள் தே நீரையும் யி இன மக்கள் மதுவையும் பெரிதெனக் கருதுகின்றனர் என்று பொது மக்கள் கூறுவர். மது அருந்தும் போது, அனைவரும் தரையில் வட்டமாக உட்கார்ந்து பேசி மகிழ்வர். தவிர, மது அருந்தும் போது உணவு உண்ண மாட்டார்கள். முதியோர் தே நீரை அருந்துவது வழக்கம்.

விழா நாட்களில் பன்றி, ஆடுகளைக் கொன்று கொண்டாடுவர். பணக்காரர்கள் மாடுகளையும் கொல்வர். விழாவின் போது, விருந்து அளித்த வேண்டும். உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களைப் பார்த்து பரிசுகளைப் பரிமாறிக் கொள்வது வழக்கம். விருந்தினர்கள் அறைக்குள் நுழைந்தவுடன் உபசரிப்பவர் மது அளிக்க வேண்டும். பின்னர், பல்வகை சுவையான உணவுகளை சமைத்து தருவர். இதன் மூலம் விருந்தினருக்கு மதிப்பு காட்டுவர்.