இவ்வாண்டின் முதல் 7 திங்களில், சுமார் 3 லட்சம் சீன வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 70 விழுக்காடு அதிகமாகும். இன்று சீன வணிக அமைச்சகத்திலிருந்து எமது செய்தியாளர் இதை அறிந்தார். சீனா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாகனங்களில், வணிகப் பயன்பாட்டு வாகனங்கள் முக்கிய இடம்பெறுகின்றன. மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா, சீனாவின் வாகனங்கள் ஏற்றுமதியின் பாரம்பரிய சந்தைகளாகும். கடந்த சில ஆண்டுகளாக, ஐரோப்பாவில், குறிப்பாக, கிழக்கு ஐரோப்பாவில் சீன வாகனங்களின் சந்தை பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது என்று தெரிய வருகின்றது. வணிக அமைச்சகத்தின் மதிப்பீட்டின் படி, இவ்வாண்டு, சீனா, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை, 5 லட்சத்தைத் தாண்டக்கூடும்.
|