ஜூன் திங்கள் இறுதிக்குள், சீனா முழுவதிலும், சமூகப் உத்தரவாத நிதித்தொகை, 40 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது என்று சீனத் தேசிய சமூக உத்தரவாத நிதியத்தின் துணை இயக்குநர் Wang Zhong Min கூறியுள்ளார். நேற்று சீனச் சமூக உத்தரவாதக் கருத்தரங்கில் அவர் இவ்வாறு கூறினார். "பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பயனில் கவனம் செலுத்தப்படுவது" என்னும் முதலீட்டுக் கோட்பாட்டை இந்நிதியம் நிறைவேற்றுகின்றது என்றும், நிதி வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறினார். கடந்த ஜூன் திங்கள் இறுதிக்குள், நாடு முழுவதிலும், 15 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள நலன் தொகை பெறப்பட்டுள்ளது. இருந்த போதிலும், சீனாவின் 130 கோடி மக்கள் தொகையைப் பொறுத்த வரை, இது போதாது. 2 லட்சம் கோடி யுவான் என்ற அளவை எட்டி, ஆண்டு நலன் தொகை, 5 விழுக்காட்டுக்கு மேல் அடைந்ததால், வட்டிக்கு விட்ட மூலதனம் பயன்படுத்தப்பட்டாத நிலையில், சமூக உத்தரவாத தேவையை நிறைவு செய்யலாம் என்று Wang Zhong Min கருத்து தெரிவித்தார்.
|