புதிய மதிப்பீட்டின் முடிவின் படி, 6 ஆயிரம் 500 கோடி டன் அளவுடைய எண்ணெய் வளம் சீனாவில் கண்டுபிடிக்கப்படக்கூடும். இது வரை, இதில் 39 விழுக்காட்டு அளவு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இயற்கை வாயு வளமும் அதிகமாக உள்ளது. கண்டுபிடிக்கப்படக்கூடிய வளப் படிவுகள், 25 லட்சம் கோடி கன மீட்டராகும். இது வரை, 24 விழுக்காட்டு அளவு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக பெட்ரோலிய பேரவையின் சீனத் தேசியக் கமிட்டித் தலைவர் Wang Tao நேற்று பெய்சிங்கில் நடைபெற்ற, 2007ஆம் ஆண்டுகால சீன எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கருத்தரங்கில் இவ்வாறு கூறினார். எண்ணெய் அகழ்வு தொடர்பான புதிய துறைகள் மற்றும் தொழில் நுட்பங்கள் பற்றி இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது. இது வரை, உலகளவில் 16 ஆயிரம் கோடி டன் கச்சா எண்ணெய் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்படக்கூடிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு அளவு, சுமார் 10 ஆயிரம் கோடி டன்னாகும்.
|