• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-24 14:58:48    
பெய்ஜிங் சர்வதேச நூல் பொருட்காட்சி

cri

2007ம் ஆண்டு பெய்ஜிங் சர்வதேச நூல் பொருட்காட்சி அண்மையில் வெற்றிகரமாக முடிவடைந்தது. சீன மற்றும் வெளிநாட்டு வெளியீட்டகங்கள் இப்பொருட்காட்சியில் சுறுசுறுப்பாக பங்கேற்றன. இப்பொருட்காட்சி, சீன மற்றும் வெளிநாட்டுப் பண்பாட்டுப் பரிமாற்றத்தின் முக்கிய மேடையாக அமைந்துள்ளது என்று வெளியீட்டக வட்டாரத்தினர்கள் பொதுவாகக் கருதுகின்றனர்.


பெய்ஜிங் சர்வதேச நூல் பொருட்காட்சி, தற்போது ஆசியாவில் மிக பெரிய சர்வதேச நூல் பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சி, ஆகஸ்ட் 30ஆம் நாள் முதல், செப்டெம்பர் 3ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. 58 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 1400 வெளியீட்டகங்கள் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டன. இதில் அமெரிக்காவின் John Wiley, சிங்கப்பூரின் Elsevier உட்பட, உலகில் புகழ் பெற்ற வெளியீட்டகக் குழுமங்கள் அடங்கும்.

வங்காளத்தேசம், ஒமான், தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அசர்பைஜான், உஸ்பெக்ஸ்தான் உள்ளிட்ட 6 ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளும் இப்பொருட்காட்சியில் முதல் முறையாக பங்கெடுத்தன.


பெய்ஜிங் சர்வதேச நூல் பொருட்காட்சி, சீனா மற்றும் உலகின் பல்வேறு வெளியீட்டகத் துறையினரை இணைக்கும் தொடர்பாக விளங்குகிறது. இது, சீன மற்றும் வெளிநாட்டு வெளியீட்டக வட்டாரத்தினர் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் மேற்கொள்ளும் பரந்த மேடையாகும். மேலும் அதிகமான சீன மற்றும் வெளிநாட்டு வெளியீட்டக வட்டாரத்தினர், இப்பொருட்காட்சி வழங்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, பதிப்புரிமை வர்த்தக மற்றும் நூல் வெளியீட்டுப் பணியின் பரிமாற்றங்களை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு, அனுபவங்களைப் பரிமாறி, சர்வதேச வெளியீட்டகத் துறையின் செழிப்பையும் வளர்ச்சியையும் விரைவுபடுத்தக் கூட்டாக முயற்சி செய்ய வேண்டும் என்று பெய்ஜிங் சர்வதேச நூல் பொருட்காட்சியின் அமைப்பாளரும், சீனத் தேசிய செய்தி வெளியீட்டுத் தலைமை அலுவலகத்தின் தலைவருமான Liubinjie விருப்பம் தெரிவித்தார்.


பெய்ஜிங் சர்வதேச நூல் பொருட்காட்சி, 1986ம் ஆண்டு துவங்கிய பின் அதன் அளவு தொடர்ந்து விரிவாகி வந்து, தரமும் உயர்ந்து வருகிறது. இப்பொருட்காட்சியின் நிலப்பரப்பு, 34 ஆயிரம் சதுர மீட்டர். இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட 30 விழுக்காடு அதிகமாகும். ஏறக்குறைய ஒரு லட்சம் நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பொருட்காட்சியின் நிலப்பரப்போ அல்லது அளவோ முன் கண்டிராதவை.