2002ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16வது மாநாடு நடைபெற்ற பின், சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப ஆற்றல் பெருமளவில் உயர்ந்துள்ளது. ஒரு பகுதி துறைகள், உலக முன்னணியில் இடம்பெறுகின்றன. அறிவியல் தொழில் நுட்பம், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் வலிமை மிக்க ஆதரவை அளித்துள்ளது. சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தைச் சேர்ந்த ஆய்வு பணியகத் தலைவர் Xu He Ping இன்று பெய்சிங்கில் இவ்வாறு கூறினார். தற்போது, முழுமையான கட்டமைப்பு சீனாவில் உருவாகியுள்ளது. தேசிய நிலை ஆய்வுக்கூடங்கள், தேசிய நிலை முக்கிய ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட அறிவியல் ஆய்வுத் தளங்களின் தரம், சர்வதேச ஆய்வுக்கூடங்களின் தரத்தை எட்டியுள்ளது. இந்த அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளாக, அடிப்படை ஆய்வு மற்றும் முன்னேறிய துறைகளில், தொழில் நுட்பப் புத்தாக்க ஆற்றல் தெளிவாக உயர்ந்துள்ளது. உயர் தொழில் நுட்பத் தொழில் அளவு, உலகளவில் உயர்தரமானது என்று Xu He Ping கூறினார்.
|